ஸ்ரீநகர்: மசூதியில் குண்டு வீச்சு - 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசித் தாக்கியதில் 6பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஸ்ரீநகரிலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஹாப் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு இங்கு தீவிரவாதி ஒருவன் கை எறி குண்டை மசூதிக்குள் வீசி விட்டுத்தப்பினான். இதில் உள்ளே தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications