முரசொலி மாறன் நூல்கள் கல்லூரிக்கு அன்பளிப்பு
சென்னை:மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பயன்படுத்தி வந்த 8000க்கும் மேற்பட்ட நூல்கள், சென்னைலயோலா கல்லூரிக்கு அன்பளிப்பாக தரப்பட்டது.
மறைந்த மத்திய அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமாக விளங்கியவருமான முரசொலிமாறன் சிறந்த புத்தகப் பிரியர். எந்த ஊருக்குச் சென்றாலும் சில புத்தகங்களை வாங்காமல் வர மாட்டார்.
தமிழ் இலக்கியம், பண்பாடு, திராவிட இயக்கம், பொருளாதாரம் என பல வகை நூல்களை விரும்பிப் படித்தவர்.
மாறன் பயன்படுத்திய புத்தகங்களின் எண்ணிக்கை 8000க்கும் மேல் இருந்தன. இந்தப் புத்தகங்களை சென்னைலயோலா கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்க மாறனின் மனைவி மல்லிகா மாறன் முடிவு செய்தார். இந்தக்கல்லூரியில்தான் கலாநிதி மாறனும், தயாநிதி மாறனும் படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து இந்தப் புத்தகங்களை வைப்பதற்காக ஒரு நூலகக் கட்டடத்தையும் மல்லிகா மாறன்குடும்பத்தினர் கட்டிக் கொடுத்துள்ளனர். இந்த நூலகத்திற்கு முரசொலி மாறன் ஆய்வு நூலகம் என்றுபெயரிடப்பட்டுள்ளது.
இந்த நூலகக் கட்டடத்தை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நேற்று திறந்து வைத்து புத்தகங்களையும்அன்பளிப்பாக வழங்கினார். நிகழ்ச்சியில், லயேலோ கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை, விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications