அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சூட்கேஸ் அபேஸ்
சென்னை:ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சூட்கேஸை யாரோ திருடிச் சென்றதால்பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சேலத்திலிருந்துசென்னைக்கு வந்தார். சென்னை வந்ததும் தனது சூட்கேஸைப் பார்த்தபோது அங்குஅது இல்லாததால் திடுக்கிட்டார்.
அதில் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது. இதேபோலஅமைச்சர் பயணித்த பெட்டியில் பயணம் செய்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கருப்பனின் சூட்கேஸும் திருட்டு போயுள்ளது.
இதுகுறித்து சென்டிரல் ரயில் நிலைய போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.அரக்கோணம், சென்டிரல் இடையேதான் திருட்டு நடந்திருக்கும் என போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து அரக்கோணம் ரயில்வே போலீஸாருக்கு புகார் மாற்றப்பட்டது.பலத்த பாதுகாப்புடன் பயணம் செய்த அமைச்சரின் சூட்கேஸே திருட்டு போயுள்ளதுரயில் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications