கருணா கோஷ்டியில் சிறுவர்கள்-உதவும் இலங்கை
கொழும்பு:போர் முனையில் சண்டையிடுவதற்காக, கருணா குழுவினருக்கு தமிழ்ச் சிறுவர்களை பிடித்து கொடுப்பதாகஇலங்கை ராணுவம் மீது ஐ.நா. சிறப்புத் தூதர் ஆலன் ராக் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. செஞ்சோலை,மட்டக்களப்பு என தமிழர்கள் மீதான படுகொலைத் தாக்குதல் தீவிரமாகியுள்ள நிலையில், மறுபுறம்யாழ்ப்பாணத்தில் தமிழர்களைபட்டினிச் சாவுகளுக்கு ஆளாக்கி வருகிறது இலங்கை அரசு என குற்றச்சாட்டு தீவிரமடைந்து வருகிறது.
யாழ்ப்பாணத்தில் நிலைமை மோசமாகி வருவதாகவும், டிசம்பருக்குள் உணவுப் பொருள், மருந்துப்பொருட்களின் விநியோகம் சீரடையாவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகி விடும் என சர்வதேசசெஞ்சிலுவைச் சங்கம்எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, கருணா குழுவினரின் படையில் சேர்ப்பதற்காக தமிழ்ச் சிறுவர்களைப் பிடித்து கொடுத்துவருவதாக இலங்கை ராணுவம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகள் மற்றும் போர் விவகாரம்குறித்தஐ.நா. சிறப்புப் பிரதிநிதிக்கான சிறப்பு ஆலோசகரான ஆலன் ராக்தான் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இலங்கையில் போரில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது குறித்த உண்மை நிலையை அறிவதற்காக அவர்கொழும்பு வந்துள்ளார். தனது 10 நாள் ஆய்வை முடித்துக் கொண்ட ராக் கொழும்பில் செய்தியாளர்களிடம்பேசினார்.
அப்போது, அரசுப் படையினரில் சிலர் குழந்தைகளைக் கடத்தி அவர்களை கருணா தலைமையிலானபிரிவினருக்கு அனுப்பி வருகின்றனர். இவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் குழந்தைகளை கடத்தி கருணாகுழுவினரிடம் சேர்த்துவருகின்றனர்.
கருணா பிரிவுக்கு இலங்கை ராணுவம் முழுமையாக ஆதரவு தருகிறது. இதன் மூலம் தனது நாட்டின் சட்டத்தை,இலங்கை அரசே மதிக்காமல் மீறி வருகிறது. இலங்கை ராணுவத்தின் செயலால் விடுதலைப் புலிகளும், நிறையசிறார் வீரர்களைஉருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு இலங்கை ராணுவம் சென்று அங்குள்ள சிறுவர்களை புகைப்படம்எடுக்கிறது. பின்னர் அவர்களில் தங்களுக்கு யார் தேவை என்பதை கருணா பிரிவினர் இலங்கை ராணுவத்திடம்தெரிவிக்கிறார்கள்.
அவர்கள் கூறும் சிறுவர்களை இலங்கை ராணுவம் கடத்திக் கொண்டு வந்து கருணா பிரிவில் ஒப்படைக்கிறது.
மட்டக்களப்பு, அம்பாரை ஆகிய பகுதிகளில்தான் ராணுவத்தின் குழந்தை கடத்தல் அதிகமாக உள்ளது.விடுதலைப் புலிகள் தரப்பிலும் சிறார்களை போர் பயிற்சியில் ஈடுபடுத்துவது இன்னும் குறையவில்லை.மொத்தத்தில் தமிழ்ச் சிறுவர்களின் நிலை இன்று இலங்கையில் பரிதாபகரமாக உள்ளது. அனைத்துத் தரப்பினரும்அவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறார்கள்.
இந்தப் பிரச்சினை குறித்து இலங்கை அதிபருடன் விவாதித்தேன். ராணுவத்தின் இச்செயல் குறித்து விசாரிப்பதாகஅதிபர் உறுதியளித்துள்ளார். தவறு செய்த ராணுவத்தினர் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என அவர்உறுதியளித்துள்ளார்என்றார் ராக்.
யுனிசெப் நிறுவன கணக்குப்படி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1598 சிறுவர்கள் உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 649 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் ஆவர். கருணா பிரிவில் 142சிறார்கள் உள்ளனர்.
ராக்கின் குற்றச்சாட்டை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பில்வெளியான அறிக்கை: ஆலன் ராக்கின் அறிக்கை முழுமையாக தவறானது. திசை திருப்பும் நோக்கில் அவர்குற்றம்சாட்டியுள்ளார். இது வருத்தம் தருவதாக உள்ளது.
எந்த போராளிக் குழுவுடனும், இலங்கை ராணுவத்துக்குத் தொடர்பு இல்லை. யாருக்கும் நாங்கள் உதவிசெய்யவும் இல்லை.
இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது ஆலன் ராக் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது. இந்தகுற்றச்சாட்டுக்கு நேரடி ஆதாரம் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications