இந்தியா-பாக். பேச்சுவார்த்தை தொடங்கியது
டெல்லி:இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்திலானபேச்சுவார்த்தை இன்று டெல்லியில் தொடங்கியது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தைஇன்று காலை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் தொடங்கியது.
இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.எஸ்.மேனன் தலைமையில் இந்தியக் குழுவும்,பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் ரியாஸ் முகம்மது கான் தலைமையில் பாக்.குழுவும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன.
இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், தீவிரவாத ஒழிப்புஉள்ளிட்ட இரு தரப்பு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
கியூபா தலைநகர் ஹவானாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர்முஷாரப்பும் சந்தித்தபோது முடிவு செய்யப்பட்ட தீவிரவாத தடுப்பு அமைப்பைஉருவாக்குவது குறித்தும் இப்பேச்சுவார்த்தையில் முக்கியமாகவிவாதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications