ஜிப்மர்:எவனாலும் தடுக்க முடியாது-ராமதாஸ்
புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவனைக்கு சுயாட்சி அதிகாரம் கொடுப்பதைஎவனாலும் தடுக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் படு ஆவேசமாககூறியுள்ளார்.
புதுவை பாமக எம்.பி.ராமதாஸின் பொது வாழ்வுச் சாதனைகளைப் பாராட்டும்விதமாக புதுவையில் பாமக சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் படு ஆவேசமாகவும்,காட்டமாகவும் பேசினார்.
ராமதாஸின் பேச்சு புதுவை முதல்வர் ரங்கசாமியை குறி வைத்து ஆவேசமாகஇருந்தது. குறிப்பாக ஜிப்மர் விவகாரம் தொடர்பாக அவர் பேசும்போது அவன்,இவன் என்று ஒருமையிலும் கோபமாக பேசினார்.
ராமதாஸ் பேசுகையில், ஜிப்மர் மருத்துவனைக்கு கண்டிப்பாக சுயாட்சி அந்தஸ்துகொடுக்கப்படும். அந்த மருத்துவமனை மிகச் சிறந்த வசதிகளைப் பெறும்பொருட்டுதான் சுயாட்சி அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
சுயாட்சி அதிகாரம் கொடுக்கப்படுவது நிச்சயம். அதை எவனாலும் தடுக்க முடியாது.எந்த நாயாலும் தடுக்க முடியாது. ஜிப்மருக்கு சுயாட்சி அந்தஸ்து கிடைப்பதால்தங்களுக்கு பாதிப்பு வரும் என ஊழியர்கள் நினைக்கத்தேவையில்லை.
ஊழியர்கள் தங்களது போராட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். அவர்களைசிலர் பின்னால் இருந்து தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதுஎங்களுக்கும் தெரியும். அவர்களின் சதி பலிக்காது.
இங்கே என்ன ஆட்சி நடக்கிறது என்றே தெரியவில்லை. ரங்கசாமி முதல்வராகநீடித்தால், புதுவை மாநிலம் சீரழிந்து விடும், சின்னாபின்னமாகிப் போய் விடும்.அவரது ஆட்சியில் புதுவை சிதிலமடைந்து போய்க் கிடக்கிறது.
பாண்டிச்சேரி என்ற பெயரை புதுச்சேரி என்று மாற்ற முக்கியக் காரணம் இங்கே உள்ளபாமக எம்.பி. ராமதாஸ்தான். அவரது இந்த வரலாற்றுச் சாதனையை பாடப்புத்தகத்தில்இடம் பெறச் செய்ய வேண்டும்.
அதேபோல புதுவையில் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் எம்.பி.ராமதாஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். பஞ்சாயத்துக்குளுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிஉண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.
தேசிய பஞ்சாலைக் கழகம் வசம் இருந்த பாரதி மற்றும் சுதேசி மில்களைப் பெற்றுஅதை மாநில அரசிடம் ஒப்படைத்த பெருமையும் பாமகவுக்கே உண்டு என்றார்ராமதாஸ்.
முதல்வர் ரங்கசாமியையும், புதுவை காங்கிரஸ் ஆட்சியையும் ராமதாஸ் கடுமையாகவிமர்சித்துப் பேசியிருப்பது புதுவை காங்கிரஸார் மத்தியில் கடும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications