மாநகராட்சி மண்டல குழு தேர்தல்: திமுக வெற்றி

Subscribe to Oneindia Tamil

மதுரை:தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளிலும் இன்று நடந்த மண்டலக் குழுத் தலைவர் தேர்தலிலும் திமுக கூட்டணியே வெற்றிபெற்றது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சிகளிலும் இன்று மண்டலக் குழுத் தலைவர்பதவிகளுக்கான தேர்தல் நடந்தது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 10 மண்டலங்களிலும் திமுக அணியே தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது. இதில்7 பதவிகளை திமுகவும், 2 இடங்களில் காங்கிரஸும், பாமக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

மதுரையில் உள்ள 4 மண்டலக் குழுத் தலைவர் பதவிகளையும் திமுகவே வென்றது. மதுரை கிழக்கு, மேற்கு, தெற்குமண்டலங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாயினர். வடக்கு மண்டலத்தில் திமுக சார்பில் இசக்கிமுத்துவும்,அதிமுக சார்பில் ஜெயவேலும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஜெயவேலின் மனுவை மாநகராட்சி தேர்தல் அதிகாரிதினகரன் தள்ளுபடி செய்தார். ஆனால், அதற்கான காரணத்தை சரியாக கூறவில்லை.

இதையடுத்து மாநகராட்சி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தை அதிமுக மற்றும் மதிமுக கவுன்சிலர்கள் 9 பேரும்முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக மாநகராட்சியின் முன் ஆர்ப்பாட்டம்நடத்திய அதிமுகவினரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேற்கு மண்டலத்தில் அதிமுக, திமுகவேட்பாளர்கள் சமமான ஓட்டுகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார். இன்னொரு மண்டலத்தில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது. தெற்கு மண்டலத்தில்அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் போட்டியின்றி வென்றார்.திருச்சியில் உள்ள 4 மண்டலங்களில் திமுக 3 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் வென்றன. நெல்லையில் உள்ள 4மண்டலக் குழுத் தலைவர் பதவிகளில் திமுக 3லும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றனர்.

சேலத்தில் உள்ள 4 மண்டலக் குழுத் தலைவர் பதவிகளில் சூரமங்கலம் மண்டலத்திற்கான முடிவு மட்டும் வெளியாகியுள்ளது.இதை திமுக வென்றது.

பண மோசடியில் அதிமுக கவுன்சிலர் கைது:

இதற்கிடையே மதுரை மாநகராட்சி 65வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜா சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி ஓட்டுப்பதிவின் போது ஒரு கும்பலால் கடத்தப்பட்ட சீனிவாசன் பின்னர் விடுவிக்கப்பட்டார். இச் சம்பவம் குறித்து மதுரைஆண்டாள்புரம் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் டிவிஎஸ் நகரில் உள்ள சீனிவாசனின் வீட்டுக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வந்து,அவரிடம் உங்கள் மீது பண மோசடி புகார் இருப்பதால், விசாரணைக்கு வருமாறு கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றனர்.

சீனிவாசன் மீது அப்பகுதியை சேர்ந்த ஒரு பிரமுகர் பண மோசடி புகார் கொடுத்துள்ளதாகவும் அதன் பேரில் சீனிவாசன் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும்போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரை நகர் மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா கூறுகையில்,

கவுன்சிலர் சீனிவாசன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து அதிகாலையில் கைது செய்துள்ளனர். மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர் நடக்கும்நிலையில் கவுன்சிலர் சீனிவாசனை திமுகவினரின் தூண்டுதலின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+