கார் மோசடி: பிரபல தொழிலதிபரின் மகள் கைது
சென்னை:வாடகைக்கு கார்களை வாங்கி அவற்றை விற்றும், உதிரிபாகங்களை கழற்றி விற்றும் மோசடி செய்ததாக பிரபலதொழிலதிபர் ஓபுல் ரெட்டியின் மகள் மீனாட்சி ரெட்டியை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நிப்போ பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருபவர்தொழிலதிபர் ஓபுல் ரெட்டி. இவரது மகள் மீனாட்சி ரெட்டி. இவரது கணவர் விஜயவர்த்தன் ரெட்டி. இவர்கொடுங்கையூரில் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கடந்த ஒரு வருடமாக மீனாட்சி ரெட்டி தமிழகத்தைச் சேர்ந்த பல டிராவல் ஏஜென்சிகளிடம் வாடகைக்குகார்களை எடுத்து வந்துள்ளார். சென்னையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட கார்களை இப்படி வாடகைக்குஎடுத்துள்ளார்.
இந்தக் கார்களுக்கு அவர் முறையாக வாடகை கொடுக்கவில்லையாம். மேலும் பல கார்களை விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மற்ற கார்களிலும் கூட என்ஜின் உள்ளிட்ட பாகங்களை கழற்றி விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மீனாட்சி மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் நூற்றுக்கணக்கான புகார்கள்குவிந்தன. ஆனால் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்தார்மீனாட்சி.
இந்த நிலையில் மீனாட்சி மீதான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து அவரை விசாரிக்கபோலீஸார் முடிவு செய்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு மீனாட்சி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இதைத் தொடர்ந்து மீனாட்சி தலைமறைவாகி விட்டார்.
அவர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் சென்னைவந்தவுடன் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டனர். அதன்படி நேற்று மீனாட்சி சென்னைக்குத் திரும்பியதுதெரிய வந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு விரைந்த போலீஸார் மீனாட்சியை கைது செய்ய முயன்றனர்.
ஆனால் போலீஸாரைப் பார்த்ததும் மீனாட்சி ஆவேசமாகி, என்னைப் பிடித்தால் தற்கொலை செய்து கொள்வேன்.எனது செல்வாக்கு தெரியாமல் வந்து விட்டீர்கள் என கோபமாக கத்தியுள்ளார். அப்போது மீனாட்சியின் கணவர்,தனது மனைவியை கைது செய்து அழைத்துச் செல்லுங்கள் என்று போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் மீனாட்சியை கைது செய்து மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குஅழைத்து வந்தனர்.
தகவல் அறிந்ததும் மீனாட்சியால் ஏமாற்றப்பட்ட டிராவல் ஏஜென்சி உரிமையாளர்கள் ஆணையர்அலுவலகத்திற்கு விரைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீஸார் மீனாட்சியிடம் விசாரணைநடத்தி அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் தலைமைமெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் வைக்க பொறுப்பு நீதிபதிகணேசன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில மீனாட்சி அடைக்கப்பட்டார். இதற்கிடையே, மீனாட்சிபோலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பரபரப்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
மீனாட்சி ரெட்டி கொடுத்துள்ள வாக்குமூலம்:
எனது பூர்வீகம் ஆந்திராதான் என்றாலும் நான் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். 1980ம் ஆண்டு எனக்குத்திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வைஷ்ணவி கல்யாணமாகி தனது கணவருடன்பெங்களூரில் வசித்து வருகிறார். 2வது மகள் வைதேகி அமெரிக்காவில் படித்து வருகிறார்.
கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறு வயது முதலே ஆடம்பரமாக வாழ்ந்து பழகி விட்டது.ஆடம்பரமாக செலவு செய்வது, பணத்தை தண்ணீராக செலவு செய்வது என்று பழகி விட்டேன்.
ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு எனது செலவுக்கு கணவரிடமிருந்து அதிக அளவில் பணம் கிடைக்கவில்லை.இதனால் எனது பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டேன்.
எனது செலவுகளுக்கு பணம் தேவை என்பதற்காக சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆனால்அதில் எனக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அதை மூடி விட்டேன்.
கடன் சுமையால் ஒருபக்கம், ஆடம்பரமாக வாழ முடியவில்லையே என்ற கவலை மறுபுறமும் என்னைவாட்டியது. இந்த நேரத்தில் எனது மேனேஜராக பணியாற்றி வந்த முரளி குறுக்கு வழி ஒன்றை எனக்குக்காட்டினார்.
பிலிப் மேத்யூ என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் கார்களை வாடகைக்கு விடும் தொழிலில்ஈடுபட்டுள்ளார். சில தில்லுமுல்லுகளை செய்தால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என மேத்யூ யோசனைசொன்னார்.
அதாவது கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றை வெளிமாநிலங்களில் விற்பதுதான் மேத்யூ கொடுத்தயோசனை. இந்த மோசடித் திட்டத்தில் என்னுடன் முரளி, மேத்யூ, சத்தியநாராயணன், கலைச்செல்வி,சத்தியமூர்த்தி ஆகியோர் சேர்ந்து கொண்டனர்.
அவரவருக்குத் தெரிந்த இடங்களில் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்தனர். இவ்வாறு 70கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றை கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் விற்றோம். இதன் மூலம் ரூ. 70 லட்சம்பணம் கிடைத்தது.
அதில் எனக்குப் பெரிய பங்கு கிடைத்தது. அதை வைத்து கடனை அடைத்தேன். எனது செலவுக்கும் போதியபணம் கிடைத்தது. இதனால் இதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.
இப்படியாக குவாலிஸ், ஹூண்டாய், ஸ்கார்பியோ உள்ளிட்ட சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து விற்றுவந்தோம். எனது பெயரில் 26 வாடகைக் கார்களுக்கும், மேத்யூ பெயரில் 26 கார்களையும் வாடகைக்கு எடுக்கஒப்பந்தம் செய்திருந்தோம். மற்ற கார்களை கலைச்செல்வி பெயரில் எடுத்திருந்தோம்.
இந்த நிலையில்தான் எனக்கு நெருக்கடிகள் முற்றின. இதைத் தொடர்ந்து நான் கார்களை வாடகைக்குஎடுத்திருந்த சில டிராவல் ஏஜென்சி உரிமையாளர்களிடம் பணத்தைத் திருப்பித் தருவதாக ஒத்துக் கொண்டேன்.அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்து இப்போது படு குழியில் விழுந்து விட்டேன். நான் மோசடி செய்த பணத்தைத்திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் மீனாட்சி.












Click it and Unblock the Notifications