சிவமணி சொல்லித் தர டிரம்ஸ் வாசித்த கலாம்!

Subscribe to Oneindia Tamil

Kalam with Sivamaniடெல்லி:ஜனாதிபதி மாளிகையில் நடந்த டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சியில் மேடையேறிய குடியரசுத் தலைவர்அப்துல் கலாம், டிரம்ஸ் வாசித்து கலக்கினார்.

விஞ்ஞானி, கல்வியாளர், கவிஞர், தமிழ் ஆர்வலர் என பன்முகம் கொண்ட ஜனாதிபதி கலாம் சிறந்த இசைக்கலைஞரும் கூட. தினமும் வீணை வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.

வழக்கமாக ஜனாதிபதி மாளிகை பொது மக்களுக்காக திறக்கப்படாது. ஆனால், அதை பள்ளிக் குழந்தைகளுக்காகதிறந்துவிட்டவர் கலாம். ராஷ்ட்ரபதி பவனில் தான் உருவாக்கியுள்ள மூலிகைத் தோட்டத்தை குழந்தைகளுக்குசுற்றிக் காட்டுவதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு பணியாகவே செய்து வருகிறார்.

அதே போல ராஷ்ட்ரபதி பவனின் மொகல் தோட்டத்தில் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துவருகிறார். இந்துஸ்தானி, கர்நாடக இசை, வில்லுப்பாட்டு என பல வகையான இசைக் கலைஞர்களை ஜனாதிபதிமாளிகையில் இசையமைக்க வைத்து அவர்களை கெளரவித்து வருகிறார்.

இந் நிலையில் டிரம்ஸ் சிவமணியையும் ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்தார் கலாம். அங்கு சிவமணியின்சோலோ டிரம்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்த கலாம், ஒரு கட்டத்தில் தானே மேடையேறினார். சிவமணியிடம் டிரம்ஸ்வாசிப்பது குறித்து கேட்டறிந்தவர் அடுத்த சில நிமிடங்களில் தானும் வாசித்துக் காட்டினார்.

கூடியிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி கலாமை பாராட்டிய நிலையில், சிவமணியிடம் சில நிமிடங்கள் தனியேபேசி அவரை பாராட்டி விட்டு கீழே இறங்கினார் கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+