திண்டுக்கல்-கிணற்றில் வீசப்பட்ட முதிய தம்பதி
திண்டுக்கல்:திண்டுக்கலில் வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த வயதான தம்பதியை அடையாளம் தெரிய சிலர் தூக்கி கிணற்றில்வீசினார். இதில் மூதாட்டி உயிரிழந்தார்.
திண்டுக்கல் தோமையாபுரம் அண்ணாமலையார் மில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி (70). இவரதுமனைவி லட்சுமியம்மாள் (65). இருவரும் இப்பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று நள்ளிரவு நாராயணாசாமியின் வீட்டுக்குள் நுழைந்து கும்பல், அங்கு தூங்கிக் கொண்டிருந்த நாராயணசாமிமற்றும் அவரது மனைவி இருவரையும் தூக்கி அருகில் இருந்த கிணற்றில் வீசினர்.
இன்று காலை அந்த கிணற்றின் வழியாக வந்த பால்காரர் கிணற்றுக்குள் முனகல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சிஅடைந்தார். கிணற்றுக்குள் இருவர் கிடப்பதைப் பார்த்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புபடையினர் வந்து கிணற்றுக்குள் உயிருக்கு போராடி கொண்டிருந்து நாராயணசாமியை மீட்டனர்.
நீரில் மூழ்கி நாராயணசாமியின் மனைவி லட்சுமியம்மாள் உயிரிழந்துவிட்டார். மீட்கப்பட்ட நாரணசாமிதிண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications