அருணாச்சல் எங்களுக்கே சொந்தம்-சீனா
டெல்லி:அருணாச்சல் பிரதேசம் மாநிலம் சீனாவுக்குச் சொந்தமானது என்று இந்தியாவுக்கான சீனதூதர் சூன் யூக்ஸி கூறியிருப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுமையும் சீனாவுக்குச் சொந்தமான பகுதி என்று யூக்ஸிசீனத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு மத்தியஅரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிஅருணாச்சல் பிரதேசம் என்பதில் எந்தவித சந்தேகம் சீனாவுக்குத் தேவையில்லை.அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம்.
சீன தூதரின் பேச்சு கண்டனத்துக்குரியது. இது தேவையற்ற பேச்சு என்றார் முகர்ஜி.இதேபோல, அருணாச்சல் பிரதேச மாநில ஆளுநர் எஸ்.கே.சிங்கும் சீனத் தூதரின்பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முரட்டுத்தனமாக பேசுவதே சீனர்களின் வாடிக்கையாகபோய் விட்டது. இதற்கு முன்பும் இதுபோல பேசியுள்ளனர். இப்போதும் அதுபோலவேபேசியுள்ளனர். இது கண்டனத்துக்குரிய பேச்சு என்றார்.
சீன அதிபர் ஹூ ஜின்டாவோ வருகிற 20ம் தேதி இந்தியா வருகிறார் 23ம் தேதி வரைஅவர் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் சீன தூதர், அருணாச்சல் பிரதேசம்சீனாவுக்குச் சொந்தமானது என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications