இலங்கை விவகாரம்-பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்
சென்னை:இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய வரும் முன்பாகவே யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையை திறக்க வேண்டும் எனவலியுறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம்எழுதியுள்ளார்.
பிரமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கை அதிபர் ராஜபக்சே 26ம் தேதி இந்தியா வரவுள்ளார். அதற்கு முன் யாழ்ப்பாணத்தை முக்கியபகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையை மக்கள் போக்குவரத்துக்காகவும், உணவு மற்றும் பொருட்கள்போக்குவரத்துக்காகவும் திறந்து விட அவரிடம் உறுதி பெற வேண்டும்.
இந்த நடவடிக்கை அங்குள்ள தமிழர்கள் படும் துன்பங்களில் இருந்து விடுபட உதவும் என்பதற்காக இதைவலியுறுத்திகிறேன். ராஜபக்சே இந்தியா வரும் முன்பாகவே அந்த நெடுஞ்சாலையை திறக்க வேண்டும் எனஇந்தியா, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். அதிகரித்து வரும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளைமுடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தஇந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனனை அனுப்புவதை விட வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியை அனுப்புவதே சிறந்தது என நாங்கள் நினைக்கிறோம்.
இவை அனைத்தும் பாமகவின் எதிப்பு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் எதிர்ப்பு ஆகும் என்றபகூறியுள்ளார் ராமதாஸ்.
ராஜபக்ஷேவை புறக்கணிக்க வேண்டும்:
ராமதாஸ் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்து இனப் படுகொலையில் ஈடுபட்டிருக்கும் ராஜபக்ஷே 26ம் தேதி இந்தியாவுக்கு வரவிருப்பதாகஅதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூனில் நடைபெறும் ஆசிய நாடுகளின் மேயர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். தமிழர்களைக் கொன்று ரத்தக் கறை படிந்த கரங்களோடு இந்தமாநாட்டை ராஜபக்ஷே தொடங்கி வைக்கிறார்.
எனவே இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநகராட்சி மேயர்களும் கலந்து கொள்ளக் கூடாது. ஈழத் தமிழர்களுக்கு தார்மீக ஆதரவைத்தெரிவிக்கும் வகையிலும், பட்டினி போட்டு அவர்களை சாகடித்து வரும் ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ராஜபக்ஷே பங்கேற்கும்முதல் நாள் மாநாட்டைதமிழக மேயர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications