இந்தியா உலக சக்தியாக மாறும்: இங்கிலாந்து
லண்டன்:உலக அளவில் பெரும் சக்தியாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவுடன் நெருங்கியஉறவு வைத்துக் கொள்ள இங்கிலாந்து தீவிரமாக உள்ளது என்று அந்நாட்டுவெளியுறவுத் துறை செயலாளர் மாகரெட் பெக்கட் கூறியுள்ளார்.
தொழிலாளர் கட்சியின் இந்திய நண்பர்கள் என்ற அமைப்பின் வருடாந்திர கூட்டம்லண்டனில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பெக்கெட் பேசுகையில்,
உலக அளவில் பெரும் சக்தியாக, வலுவான நாடாக இந்தியா உருவாகி வருகிறது.இதனால் இந்தியாவுடனான உறவுக்கு இங்கிலாந்து முக்கியத்துவம் தந்து வருகிறது.
இந்தியா மற்றும் சீனாவை தவிர்த்துவிட்டு இனி எந்த நாடும் இருக்க முடியாது. இந்தஇரு நாடுகளும் சீரான, வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன.
எனது சமீபத்திய இந்திய விஜயத்தின்போது பொருளாதார ரீதியாகவும், சமூக,கலாச்சார ரீதியாகவும் இந்தியா எவ்வளவு வேகமாக மாறி வருகிறது என்பதை உணரநேரடியாகவே முடிந்தது.
ஜனநாயகம், சகிப்புத்தன்மையின் காப்பாளராக இந்தியா விளங்குகிறது. ஐ.நா.பாதுகாப்பு சபையில், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும்.
இந்த ஆண்டு 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்றுவருகின்றனனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இது 3,000 ஆக இருந்தது.
இங்கிலாந்தின் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் விருப்பமான மாணவர்களாகஇந்திய மாணவர்கள் விளங்குகின்றனர். அந்த அளவுக்கு படிப்பில் சக்கை போடுபோடுகின்றனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications