வாரியம்-கவ்வ காத்திருக்கும் காங் கோஷ்டிகள்
டெல்லி:திமுகவிடமிருந்து அதிக அளவிலான வாரியத் தலைவர் பதவிகளை பெற்றே தீர வேண்டும் என காங்கிரஸ்கட்சியினர் மத்தியில் கோஷம் கிளம்பியுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைத்ததும் அமைச்சர்பதவி கிடைக்கும் என காங்கிரஸார் நினைத்தனர். ஆனால் அமைச்சர் பதவி கிடையாது என்று திமுக கூறிவிட்டது.
இதனால் காங்கிரஸார் கடும் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து அவர்களை சரிக்கட்டிய திமுக தலைமை,உள்ளாட்சித் தேர்தலில் தாராளமாக இடங்களைக் கொடுத்தது. ஆனால் கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டிஎன்ற கதையாக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுகவினரே போட்டி வேட்பாளராககளம் இறங்கி கைப்பற்றி கடுப்பைக் கொடுத்தனர்.
இந்த நிலையில் இப்போது வாரியத் தலைவர் பதவியை காங்கிரஸ் குறி வைத்துள்ளது. இதிலாவது தங்களுக்குத்திருப்தி ஏற்படும் வகையிலான அளவுக்கு ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் குரல்எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட சரி பாதி வாரியத் தலைவர் பதவிகள் தங்களுக்கு வேண்டும் என காங்கிரஸார் கோரிக்கைஎழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, வீரப்ப மொய்லியைசந்தித்துவலியுறுத்தவுள்ளார்.
சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு என்பதால் அவரை கிருஷ்ணசாமியால் சந்திக்க முடியவில்லை.சோனியாவையும் சந்திக்க கிருஷ்ணசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும்வாரியத் தலைவர் பதவிகளைப் பிடிக்க இப்போதே போட்டிகிளம்பி விட்டதாம்.
முன்னாள் துணை மேயரும், இப்போது கிருஷ்ணசாமியின் நிழல் போல செயல்படுபவருமான கராத்தேதியாகராஜனுக்கு நிச்சயம் வாரியத் தலைவர் பதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் தரப்பில் ராயபுரம் மனோவுக்கு பதவி கிடைக்கும் எனத் தெரிகிறது.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பில் திருச்சி ஜெயராம் ஆரோக்கியராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.சேகரன்ஆகியோர்பதவிக்கு முயற்சிக்கின்றனர்.
இதேபோல தங்கபாலு, பிரபு, ஜெயந்தி நடராஜன் ஆகியோரும் தங்களது ஆதரவாளர்களுக்கு பதவியைப் பிடிக்கமுயற்சித்து வருகின்றனர்.எத்தனை கிடைக்கும் என்பதே இன்னும் தெரியாத நிலையில் அதற்குள் ஒவ்வொரு கோஷ்டியும் ஆளுக்கொருபட்டியலுடன் டெல்லிக்குப் படையெடுக்கக் காத்திருக்கின்றன. ஆனால் மேலிடம் வழக்கம் போல எல்லோருக்கும்அல்வாவைக் கையில் கொடுத்து விட்ட திமுக கொடுக்கிறதை வாங்கிக் கொள்ளும் என்றேஎதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications