பாபநாசம் அணை திறப்பு: தாமிரபரணியில் வெள்ளம்
திருநெல்வேலி:பாபநாசம் அணை திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம்வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது.நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் வேகமாகநிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140 அடியைத் தொட்டது. அணை நிரம்ப இன்னும் 3 அடியேஉள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை நேற்று நள்ளிரவில் திறக்கப்பட்டது.
இரவு 1 மணியளவில் அணை அவசரம் அவசரமாக திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல சேர்வலாறு அணையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரும் தாமிரபரணியில்தான் கலக்கும் என்பதால்நெல்லை, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவ உள்ளிட்ட ஊர்களில் தாமிரபரணிக் கரையோரம் வசிக்கும் மக்கள்அவசரம் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.
பொதுப்பணித்துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் முழு உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க உரிய முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது.மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் இரவு மழை பெய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications