டெண்டுல்கர்-காம்ப்ளி சாதனை முறியடிப்பு!
ஹைதராபாத்:1988ம் ஆண்டு மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட்போட்டியில் சச்சின் டெண்டுல்கரும், வினோத் காம்ப்ளியும் இணைந்து எடுத்த 664ரன் சாதனையை ஹைதராபாத்தைகச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள் இருவர் முறியடித்துபுதிய சாதனை படைத்தனர்.
சச்சின் டெண்டுல்கரும், காம்ப்ளியும் பள்ளிக்காலத்து தோழர்கள் என்பதுஅனைவருக்கும் தெரியும். இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் கடந்த 1988ம்ஆண்டு நடந்த பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில், இருவரும் தொடக்கவிக்கெட்டுக்கு 664 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.
சச்சின் 329 ரன்களும், காம்ப்ளி 320 ரன்களும் எடுத்தனர். இது ஒரு உலகசாதனையாகும். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்காமல் இருந்தனர்.தற்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் இந்த சாதனையை முறியடித்துபுதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
ஹைதராபாத்தில் 13 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட்போட்டித் தொடர் நடந்தது. இதில் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளிக்கூட மாணவர்களானமனோஜ்குமாரும், முகமது ஷபாஸ் ஆகிய இரு தொடக்க ஆட்டக்காரர்களும் தங்களதுபள்ளி அணிக்காக விளையாடி ஆட்டமிழக்காமல் 721 ரன்களைக் குவித்தனர்.
மனோஜ் 320 ரன்களும், ஷபாஸ் 324 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் கடந்த 18ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த சச்சின், காம்ப்ளியின் சாதனைமுறியடிக்கப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனோஜ், ஷபாஸ் இருவரும் கூறுகையில், இந்த சாதனையை நாங்கள்எதிர்பார்க்கவில்லை. வழக்கம் போலவே ஆடினோம். சாதனை படைத்துள்ளோம்என்பதை எங்களது பயிற்சியாளர் சொன்னபோதுதான் எங்களுக்கு படபடப்பேவந்தது.
இந்திய அணியில் இடம்பெறுவதே எங்களது லட்சியம் 2015ம் ஆண்டு உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நிச்சயம் இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவோம் என்றனர்.
இவர்களில் யார் சச்சினோ? இப்போதே அட்வான்ஸாக வாழ்த்தி விடுவோம்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications