வெளிநாட்டு கொடிக்கு அமெரிக்க நகரம் தடை
பீனிக்ஸ்:அமெரிக்காவின் பெஹ்ரம்ப் நகரில் அமெரிக்க கொடிகளுக்கு இணையாகவோ அல்லது தனித்தோ வேறு நாட்டுக்கொடிகள் பறக்க விடப் படக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய நகரம் பெஹ்ரம்ப்.நெவாடா மாகாணத்தில் இந்த நகரம் உள்ளது. இந்த நகரின் நகராட்சிக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. பிற நாட்டினரின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானங்கள்அமைந்துள்ளன.
அதன்படி பெஹ்ரம்ப் நகரில் அமெரிக்க தேசியக் கொடிக்கு இணையாகவோ அல்லது தனித்தோ பிற நாட்டுக்கொடிகள் பறக்க விடப்படக் கூடாது. மீறி பறக்க விடுவோருக்கு 50 டாலர் அபராதம், 30 மணி நேர சமூகப்பணியும் தண்டனையாக வழங்கப்படும்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வேலை தரக் கூடாது என்பது இன்னொரு தீர்மானம். இதேபோலபெஹ்ரம்ப் நகரின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெஹ்ரம்ப் நகரில் மொத்தம் 40,000 பேர் வசிக்கிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில மெக்சிகோ நாட்டைச்சேர்ந்தவர்கள் இங்கு போராட்டம் நடத்தியபோது தங்களது நாட்டு தேசியக் கொடியை கையில் ஏந்தியபடிபோராட்டம் நடத்தினர்.
இதனால் கடுப்படைந்த சில நகராட்சி உறுப்பினர்கள்தான் இதுபோன்ற தீர்மானங்களை நகராட்சியில் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளனர். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1 கோடி மெக்சிகோ நாட்டவர்கள் சட்டவிரோதமாககுடியேறி வசிப்பதாக ஒரு கணக்கு கூறுகிறது என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் போராட்டம் குறித்து நகராட்சி ஊழியரான பால் வில்லிஸ் கூறுகையில், போராட்டத்தில் கலந்து கொண்டமெக்சிகோ நாட்டவர்கள் அவர்களது நாட்டு கொடியை உரிமையோடு அசைத்தபடி சென்றதை எங்களால்பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இது அமெரிக்கா, இங்கே அமெரிக்க கொடிதான் உயர்ந்தது. மற்ற நாட்டுக் கொடிகளுக்கு இங்கு இரண்டாம்பட்சம் தான் என்கிறார்.
இதற்கிடையே இந்த உத்தரவுக்கு ஒரு பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது சட்டவிரோதமானது.பேச்சுரிமைக்கு எதிரானது இது. இதை யாரும் பின்பற்ற மாட்டார்கள் என்றே கருதுகிறோம் என மெக்சிகோவம்சாவழியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜான் டிராஸ்வானியா கூறியுள்ளார்.
இதேபோல வெளிநாட்டவர்களுக்கு நிலம் விற்கக் கூடாது என பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஹாசில்டன்நகராட்சியில் சமீபத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications