கேரளத்துக்கு தைரியம் உண்டா?: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியார் அணையின் நீர்த் தேக்க அளவை 142 அடியாக உயர்த்தமத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கேரளத்துக்கு எதிராக கூடலூரில் போராட்டம் நடத்தச் செல்லும் வழியில் மதுரையில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,

கேரளத்துடன் பேசி எந்தப் பயனும் இல்லை. தமிழக விவசாயிகளின் உரிமையை நிலை நாட்ட திமுக அரசுதீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அணையின் தேக்க அளவை அதிகரிக்க அரசாணையை வெளியிட்டுஅதை நிறைவேற்ற வேண்டும்.

நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்க மத்திய அரசும் முன் வர வேண்டும். தமிழகத்துக்கு வரவேண்டிய நீரை தேக்கி வைக்க விடாமல் அரபிக் கடலில் கலக்க விட்டு திமிர்த்தனம் காட்டுகிறது கேரளம்.

தமிழக விவசாயிகள் காய்கறி, அரிசியை கேரளத்துக்கு தர மாட்டோம் என்ற முடிவெடுத்தால் கேரளத்தின் கதிஎன்னவாகும்? எங்களுக்கு தமிழகத்தில் இருந்து உணவு தானியம் வேண்டாம் என்று சொல்ல கேரளத்துக்குதைரியம் உண்டா? தமிழகத்தை சார்ந்திருக்காமல் கேரளத்தால் இருந்துவிட முடியுமா? என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+