காஞ்சியில் ரெளடி எண்கெளன்டரில் சுட்டு கொலை
காஞ்சிபுரம்:தமிழகத்தில் ரெளடிகள் வேட்டை தொடர்கிறது. காஞ்சிபுரம் அருகே பயங்கர ரெளடியான கொர கிருஷ்ணாஎன்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கொலை, கொள்ளை வழிப்பறி, ஆள் கடத்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கந்து வட்டி, மாமூல் வசூல் என பலவகையான ரெளடித்தனங்கள் செய்து வந்தவன் இந்த கொர கிருஷ்ணா. 40 வயதான இவனுக்கு கள்ளச்சாரயம்மூலம் பணம் குவிந்தது.
இதனால் காஞ்சியில் மிகப் பெரிய பங்களாவைக் கட்டி வாழ்ந்து வந்தான். இவனுக்கு காட்பாடியிலும்நெமிலியிலும் பெரிய பங்களாக்கள் உள்ளன. காஞ்சியிலும் காட்பாடியிலுமாக தனது ரெளடி சாம்ராஜ்யத்தைநடத்தி வந்தான்.
24 மணி நேரமும் குண்டர் படையோடு பல கார்களில் சுற்றுவது கொர கிருஷ்ணாவின் ஸ்டைல். இவன் மீதுகாஞ்சிபுரம் மாவட்டம் தவிர வேலூர், திருவண்ணாமலையிலும் பல வழக்குகள் உள்ளன.
கொர கிருஷ்ணாவிடம் டிரைவராக வேலை பார்த்து வந்த மோகன் என்பவர் சில மாதங்களுக்கு முன்விலகிவிட்டார். தனது செயல்பாடுகளை அறிந்த மோகன் போலீசிடம் மாட்டினால் தனக்கு எதிராக வாக்குமூலம்தந்துவிடுவான் என்று நினைத்த கொர கிருஷ்ணா மோகனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தான்.
காரில் வந்து மோகனை அடித்து, உதைத்து கடத்திச் சென்ற கொர கிருஷ்ணா மோகனை காரில் வைத்து கத்தியால்குத்தியும் அடித்தும் கொன்றுள்ளான். பின்னர் ஆந்திர எல்லையில் மோகனின் உடலை எரித்துவிட்டு சாம்பலைஅள்ளி கிணற்றில் கரைத்துவிட்டு வந்தான்.
மோகன் கடத்தல் குறித்து அவரது நண்பர் பாலாஜி போலீசில் புகார் தந்தனர். இதையடுத்து கொர கிருஷ்ணாவைபோலீசார் தேடினர். ஆனால், அவன் தலைமறைவாகிவிட்டான். அவனைப் பிடிக்க தனிப் படைகள்அமைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் ஒரு லாட்ஜில் கொர கிருஷ்ணா பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை எஸ்பிசரவணன், இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையில் அந்த இடத்தை முற்றுகையிட்டது. அப்போது ஒரு ரூமில்கொர கிருஷ்ணாவின் கூட்டாளி சூர்யா மட்டுபம் இருந்தான்.
கொர கிருஷ்ணா இரவு 9 மணிக்கு வந்துவிடுவான் எனத் தெரிவித்தான். இதையடுத்து போலீசார் மப்டிஉடைகளில் அந்த ஹோட்டலில் பதுங்கினர். 9 மணிக்கு கொர கிருஷ்ணா காரில் வந்து இறங்கியதும் அவனைபோலீசார் அப்படியே அமுக்கிப் பிடித்தனர்.
போலீசாரிடம் சிக்கிய கொர கிருஷ்ணா, மோகனை எரித்து சாம்பலை கிணற்றில் கரைத்து குறித்து வாக்குமூலம்தந்தான். கொலைக்கு பயன்படுத்திய கத்தியை கோனேரிகுப்பத்தில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளதாகக்கூறினான்.
இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் கொர கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு போலீசார்கோனேரிக்குப்பம் சென்றனர். அங்கு வைக்கோல் போருக்குள் இருந்து பட்டா கத்தியை எடுத்து போலீசாரிடம்தந்தான் கொர கிருஷ்ணா.
அடுத்து கையை விட்டு நாட்டு வெடிகுண்டுகளை வைக்கோல் போருக்குள் இருந்து எடுத்தான். அந்த குண்டுகளைஎடுத்து போலீசார் மீது வீசினான். போலீசார் தடுமாறிய நிலையில் தப்பியோட முயன்றான் கொர கிருஷ்ணா.இதையடுத்து போலீசார் அவனை சரமாரியாக சுட்டனர்.
அதில் தலையின் பின்புறம், மார்பு, நெற்றி, கை, கால் என பல இடங்களிலும் குண்டு பாய்ந்து அந்தஇடத்திலேயே கொர கிருஷ்ணா பலியானான்.
இவனது குண்டுவீச்சில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் மதிவாணண் காஞ்சி அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட கொர கிருஷ்ணாவுக்கு அபிராமி என்ற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications