கேப்டனை திட்டிய ஜெ மீது நடவடிக்கையா?
சென்னை:சட்டசபைக்கு மது அருந்தி விட்டு வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டி விமர்சித்தது தொடர்பாகவிஜயகாந்த் புகார் கொடுத்தால் ஜெயலலிதா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்என சபாநிாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பின்னர் விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்துஜெயலலிதா அறிக்கை விட்டார். குடித்து விட்டு மது போதையில் மயங்கிக்கிடக்கிறார். சட்டசபைக்கே குடித்து விட்டுத்தான் வருகிறார் என்றெல்லாம் காட்டமாககூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், நீங்கள்தான் பக்கத்தில் இருந்து ஊற்றிக்கொடுத்தீர்களா என்று கேட்டிருந்தார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ்சபாநாயகரை சந்தித்து சட்டசபைக்கு உறுப்பினர் ஒருவர் குடித்து விட்டு வருவதாகசபையின் மாண்பைக் குலைக்கும் விதமாக ஜெயலலிதா பேசியுள்ளார். எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந் நிலையில், தலைமைச் செயலகத்தில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம்சபாநாயகர் ஆவுடையப்பன் பேசுகையில்,
ஜெயலலிதா மீது விஜயகாந்த் புகார் ஏதேனும் கொடுத்தால் விசாரித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விஜயகாந்த் பிரச்சினை எழுப்பினால்அது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் சட்டசபையில் தனக்கு தனி இடம் வேண்டும்என்று கூறி வருவதாக கேள்விப்பட்டேன். ஆனால் இதுவரை என்னிடம் அவர் மனுஏதும் கொடுக்கவில்லை.
காளிமுத்து மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டசபைக் கூட்டத்தை ஒருநாளைக்கு ஒத்திவைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. முன்னாள்சபாநாயகர்கள் தமிழ்க குடிமகன், முனு ஆதி ஆகியோர் மறைந்தபோது அவையைஒத்திவைத்த மரபு உள்ளது.
மறைந்த காளிமுத்து கலைஞர் உரையிலிருந்துதான் குறளுக்குப் பொருள் சொன்னார்என்பதே உண்மை. ஆட்சியின் கடைசிக் காலத்தில் அது ஜெயலலிதாவுக்குதெரிந்ததால் அவர் கலைஞர் உரையிலிருந்து பொருள் சொல்வதை நிறுத்திக்கொண்டார் என்றார் ஆவுடையப்பன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications