வசுந்தரா ராஜேவின் கேட் வாக்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில பாஜகமுதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா, கதர் உடை அணிந்துபேஷன் ஷோவில் நடை போட்டதற்கு காந்தியவாதிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கதர் மற்றும் கைத்தறி ஆடைகளைபிரபலப்படுத்துவதற்காக ஆடை அலங்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்ச்சியில் ரக்சல் என்ற ஆடை வடிவமைப்பாளர் டிசைன்செய்திருந்த ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கதர் ஆடைகள் அணிந்து பலர் கலந்து கொண்ட கேட்வாக்கும் நடந்தது. இதில் முதல்வர் வசுந்தராவும் கதர் ஆடை அணிந்தபடி மேடையில்நடைபோட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் கல்லா, கதர்ஆடை அணிந்தபடி கேட் வாக் செய்தது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.
பிரபல காந்தியவாதியும் மாநில கதர் அமைப்பின் தலைவருமான லட்சுமிகாந்த்பண்டாரி கூறுகையில், கைகளால் மட்டுமே காதி ஆடைகளை தயாரிக்க வேண்டும்.அப்போதுதான் கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்கும் என்பது மகாத்மாகாந்தியின் கொள்கை. ஆனால் இதுபோன்ற கண்காட்சிகளில் இயந்திரங்கள் மூலம்உற்பத்தி செய்த காதி ஆடைகள்தான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
இப்படிப்பட்ட ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியை ஒரு மாநிலத்தின் முதல்வர்இவ்வாறு நடைபோட்டு பிரபலப்படுத்த முயல்வது சரியல்ல என்றார்.
ஆனால் இந்தக் கண்டனங்களை வசுந்தரா ஏற்றுக் கொள்ளவில்லை. காதி ஆடைகளைபிரபலப்படுத்தும் முயற்சியை இந்த நிகழ்ச்சி. அதில் நான் கலந்து கொண்டால் காதிஆடைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்பதால்தான் நான் கேட் வாக்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இதை தவறு என்று கூறுவதை ஏற்க முடியாது என்கிறார்மகாராணி வசுந்தரா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications