சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 5 நீதிபதிகள்
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 5 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்திற்குஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா பரிந்துரைத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்தம் 49 நீதிபதிபணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 44 நீதிபதிகள் வரை உள்ளனர். 5பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக ஐந்து பேரின்பெயர்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள்: மாவட்ட நீதிபதிகளான சுதந்திரம்,வீரராகவன், நாகமுத்து, உயர்நீதிமன்ற பதிவாளர் பழனிவேலு உள்ளிட்ட 5 பேர்.
இவர்களது பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அத்துறையின்கருத்தை உச்சநீதிமன்றம் கேட்கும். அதன் பின்னர் இவர்களை நீதிபதிகளாகநியமிக்கலாம் என குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும்.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் புதிய நீதிபதிகளை நியமித்து உத்தரவிடுவார்.இன்னும் ஒரு மாதத்திற்குள் இவர்களின் நியமனங்கள் குறித்த குடியரசுத் தலைவரின்அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications