பெரியாறு-நீர் மட்ட ஸ்கேலை அகற்றிய கேரளம்
இடுக்கிமுல்லைப் பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்வைத்திருந்த நீர் மட்ட அளவுகோலை கேரள அதிகாரிகள் அகற்றி விட்டனர்.இதன்மூலம் நீர் மட்ட அளவு குறித்து பொய் தகவல்களை சொல்லி திசை திருப்பல்வேலைகளில் கேரளா இறங்கவுள்ளதாகத் தெரிகிறது.
பெரியாறு அணையில் நீர் மட்டத்தை அறியும் அளவுகோலை தமிழக அரசின்பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொருத்தியிருந்தனர். அணையின் அதிகபட்ச நீர்தேக்க அளவு 145 அடி என அதில் காட்டப்பட்டிருந்தது.
இந் நிலையில் அந்த அளவுகோலை கேரள மாநில வருவாய்த்துறை அதிகாரிகள்அகற்றி விட்டனர். அணையின் உண்மையான நீர் தேக்க அளவு 142 அடிதான்.ஆனால் தமிழக அரசு 145 அடி என தவறான அளவை வைத்து, கூடுதல் தண்ணீரைதேக்க முயல்வதாக இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜன் கூறியுள்ளார்.
எனவேதான் இந்த அளவுகோல் அகற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கேரளஅரசு இப்படி சில்லறைத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருவது தமிழகபொதுப்பணித்துறையினருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications