கூடியது நாடாளுமன்றம்; அனல் பறக்கும்
டெல்லி:நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மறைந்தபகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராமுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவைஒத்தி வைக்கப்பட்டது.
டிசம்பர் 19ம் தேதி வரை நடைபெறும் இக் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியப்பிரச்சினைகளை கிளப்பி போராட பாஜக முடிவு செய்துள்ளது .
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சலுக்குதண்டனையை நிறைவேற்றாதது, முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுமுடிவு செய்திருப்பது, விலைவாசி உயர்வு, டெல்லி கடைகளுக்கு சீல் வைக்கும்நடவடிக்கை ஆகியவற்றை பாஜக தரப்பு லோக்சபாவில் பெரும் பிரச்சினையாககிளப்ப முடிவு செய்துள்ளது.
அரசியல் காரணங்களுக்காக அப்சலை காப்பாற்ற காங்கிரஸ் முயன்று வருவதாகபாஜக குற்றம் சாட்டியுள்ளது. எனவே அப்சல் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பும்என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல நேருவும், அம்பேத்கரும், மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை எதிர்த்தனர்.ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசோ, முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கமுயன்று வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
மேலும், தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் சற்றும் நிறுத்தாத நிலையில்அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதையும் நாடாளுமன்றத்தில் கிளப்ப அக்கட்சித் திட்டமிட்டுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதுதொடர்பான வீரப்ப மொய்லி கமிட்டியின் பரிந்துரைகளும் விவாதமாகவுள்ளது.
இட ஒதுக்கீட்டு சட்ட மசோதவைை இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றவேண்டும் என திமுக, பாமக, மதிமுக ஆகியவை கோரி வருகின்றன. அதே போலஇலங்கைத் தமிழர் படுகொலைகள் விவகாரத்தை பாமக, மதிமுக ஆகியவைகிளப்பவுள்ளன.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள்உள்ளிட்டவற்றை எதிர்க்கும் இடது சாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சினையாககிளப்ப முடிவு செய்துள்ளன.
அவுட்சோர்சிங் முறையில் பொதுத்துறை வங்கிப் பணிகளை தனியாரிடம்ஒப்படைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை இடது சாரிகள் எழுப்பவுள்ளனர்.
இவை தவிர முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரளஎம்.பிக்கள் பிரச்சினை எழுப்பலாம். அதேபோல கர்நாடக, மகாராஷ்டிர இடையிலானபெல்காம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையும் அந்தந்த மாநில எம்பிக்களால்கிளப்பப்படவுள்ளன.
முதல் நாளான இன்று நாடாளுமன்றம் நோக்கி பாஜக பேரணி நடத்தியது. அப்சலைத்தூக்கில் போடாததைக் கண்டித்து இந்தப் பேரணி நடத்தப்படுகிறது. இதில் வாஜ்பாய்,அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதவிர இடது சாரிகள் சார்பில் விவசாயிகளின் பேரணியும் இன்று நடந்தது. மகளிர்இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக் கோரி மகளிர் அமைப்புகள் சார்பிலும் பேரணிநடைபெற்றது.
பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் ஒரு சேர எழுப்பப்படவுள்ளதால் நாடாளுமன்றக்குளிர் காலக் கூட்டத் தொடர் படு அனலாக தகிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கன்சிராம் மறைவுக்காக இன்று ஒத்தி வைக்கப்பட்ட சபை நாளை முதல் கூடுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications