இலங்கையில் மேனன்-ராஜபக்ஷேவை சந்திக்கிறார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து இலங்கைஅரசுடன் விவாதிக்க இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்புவந்துள்ளார்.

இலங்கையில் சமீப காலமாகமுப்படையினரின் தாக்குதலில் சிக்கி அப்பாவித்தமிழர்கள் நூற்றுக்கணக்கில் பலியாகி வருகின்றனர். செஞ்சோலை மற்றும்மட்டக்களப்பில் நடந்த இரு பெரும் தாக்குதல்களில் மட்டும் அப்பாவித் தமிழர்கள்பெருமளவில் பலியாகியுள்ளனர்.

இலங்கை படையினரின் இந்த இனவெறித் தாக்குதல்களை பல்வேறு தரப்பினரும்கடுமையாக கண்டித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்,இலங்கை தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளன.

இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்பட்டு வருவதை இனியும் வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா? இலங்கை பிரச்சினையில் இந்தியாவின்நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விட்டது என்றுசமீபத்தில் முதல்வர் கருணாநிதி காட்டமாக கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.இதையடுத்து மன்மோகன் சிங் அனுப்பிய பதில் கடிதத்தில், இலங்கை தாக்குதலில்தமிழர்கள் பலியான சம்பவத்திற்கு இந்திய அரசும் கவலை கொண்டுள்ளதாகதெரிவித்தார்.

மேலும் வெளியுறவுச் செயலாளர் இலங்கை செல்லவுள்ளதாகவும், அப்போதுஇந்தியாவின் கவலை உரிய முறையில் தெரிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இந் நிலையில் நேற்று இரவு மேனன் கொழும்பு வந்து சேர்ந்தார். வெளியுறவுஅமைச்சர் மங்கள சமரவீரா, வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள், அமைதிச் செயலகதலைவர் பலித கொஹனோ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேஉள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

இன்று மாலை அதிபர் ராஜபக்ஷேவையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். மன்மோகன்சிங்கிடமிருந்து முக்கிய செய்தி ஒன்றையும் தன்னுடன் மேனன் எடுத்து வந்துள்ளதாககூறப்படுகிறது.

இலங்கை அரசின் தாக்குதல் மனப்போக்குக்கு பல்வேறு நாடுகளிலும் கடும் எதிர்ப்புஎழுந்துள்ளதாலும், இதே நிலை நீடித்தால், நிதியுதவியை நிறுத்தி விடுவோம் எனநன்கொடையாளர் மாநாடு எச்சரித்துள்ளதாலும்,மேனனின் கொழும்பு வருகையால்என்ன மாதிரியான மாற்றம் ஏற்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+