தந்தைகளின் உல்லாசம்-2 சிறுவர்கள் தற்கொலை
வேலூர்:தங்களது தந்தைகள் குடும்பத்தை விட்டு விட்டு வேறு பெண்களுடன் குடும்பம் நடத்தி வந்ததால் மனம் உடைந்த 2 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
வட ஆற்காடு திருப்பத்தூரை அடுத்து உள்ள கிராமம் ஆண்டியப்பனூர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு ராணி என்ற மனைவியும், கலைவாணி (14) என்ற மகள், சிவக்குமார் (13), அசோக்குமார் (17) ஆகிய மகன்களும் உள்ளனர்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு வேலு என்ற 13 வயது மகனும், கோமதி என்ற 14 வயது மகளும் உள்ளனர்.
லதாவை விட்டுப் பிரிந்த சாந்தகுமார் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதேபோல சேகரும் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி பெங்களூரில் இன்னொரு பெண்ணுடன் வசித்து வருகிறார்.
அசோக்குமாரும், வேலுவும் ஒரே பள்ளியில் படிப்பதால் நண்பர்கள் ஆகினர். இருவரும் தங்களது தந்தையின் போக்கு குறித்து வருத்தப்பட்டுக் கொள்வார்களாம்.
இருவரின் வாழ்க்கையும் ஒரே மாதியாக இருக்கிறதே என்று வேதனைப்பட்ட அவர்கள், தங்களது குடும்பத்தினரின் சோகத்தை எண்ணி விரக்தி அடைந்தனர்.இதைத் தொடர்ந்து இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து இருவரும் விஷம் அருந்தினர். இதை அறிந்த ஊர் மக்கள் இரு சிறுவர்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் இருவரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications