மத்திய போலீஸ் பாதுகாப்பு கோரும் தமிழகம்
சென்னை:முல்லைப் பெரியாறு அணையில் உள்ள கேரள போலீஸாரை நீக்கி விட்டு அங்குமத்திய போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர்மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர்துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில்உள்ள முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய அரசின் அனுமதியின்றிகடற்படை அலுவலர்களை கேரள அரசு அனுப்பியது.
முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையால் கேரள அரசின் இந்த முயற்சிமுறியடிக்கப்பட்டது. எனினும் அணையின் பலத்தை சோதிப்பதற்காக காலரிபகுதியைத் திறந்து விட மறுத்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும்கண்காணிப்பாளரை இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளரும் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் அணைப் பகுதியில் உள்ள தமிழக அரசு அலுவலர்களின் உயிர்களுக்கும்,உடமைக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.
இந் நிலை தொடராமல் இருக்க அணைப் பகுதியில் தற்போது பாதுகாப்புக்கு உள்ளகேரள போலீஸாரை நீக்கி விட்டு, மத்திய ரிசர்வ் போலீஸை, பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்த வேண்டும்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் துரைமுருகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications