மேனன்-நாராயணன்: கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை:தமிழர் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க இலங்கை சென்றிருந்த வெளியுறவுசெயலாளர் எஸ்.எஸ். மேனன் தனது 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்றுசென்னை வந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் இன்றுசென்னை வந்துள்ளார். இருவரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கைவிவகாரம் குறித்துப் பேசவுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் கண்டனம்தெரிவித்திருந்த கருணாநிதி, இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் கொள்கையைமறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக பிரதமர் மன்மோகன்சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து முக்கிய செய்தியோடு மேனனை கொழும்புக்கு அனுப்பினார்பிரதமர். அங்கு அதிபர் ராஜபக்ஷே, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே,அமைச்சர் மங்கள சமரவீரா, அமைதிச் செயலக தலைவர பலித கொஹோனா,பாதுகாப்புத் துறை செயலாளர் கோடாபயா ராஜபக்ஷே ஆகியேரை சந்தித்தார்.
இந் நிலையில் இன்று சென்னை வந்த மேனன் விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் அதிகஅளவில் இறப்பது குறித்தும், அகதிகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வருவதுகுறித்தும் அதிபர் ராஜபக்ஷேவிடம் விவாதித்தேன்.
அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. தமிழர் பிரச்சினைதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த கவலைகளையும் அதிபரிடம்எடுத்துரைத்தேன்.
தற்போது முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர் திரிபாதி ஆகியோரைசந்தித்துப் பேச சென்னை வந்துள்ளேன். கருணாநிதியின் கருத்துக்களை அறிந்தபின்னர் டெல்லி சென்று பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிப்பேன் என்றார்.
பின்னர் அவர் முதல்வரை சந்திக்க புறப்பட்டுச் சென்றார். இதேபோல தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் சென்னை வந்துள்ளார். அவரும்மேனுடன் சென்று இலங்கைப் பிரச்சினை தொடர்பாக முதல்வரை சந்தித்துவிவாதிக்கவுள்ளார்.
முன்னதாக இலங்கையில் செய்தியாளர்களிடம் மேனன் அவர் பேசுகையில்,
இங்கு அதிபர் மற்றும் பிற தலைவர்களுடன் நடந்த சந்திப்பு குறித்து இந்தியபிரதமரிடம் விரிவாக அறிக்கை தாக்கல் செய்யவுள்ளேன். அதிபருடன் நடந்தபேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பதை இப்போது தெரிவிக்கஇயலாது என்றார்.
தமிழர்கள் மீதான இலங்கை பாதுகாப்புப் படையினரின் வெறித் தாக்குதல்,தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது, இந்த விவகாரத்தில் தமிழகத்தில்எழுந்துள்ள கொந்தளிப்பான நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர்மன்மோகன் சிங் தெரிவித்திருந்த கவலைகளை ராஜபக்ஷேவிடம் மேனன்தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ராஜபக்சேவுடன் நடந்த சந்திப்பின்போது தமிழர்களுக்கு இந்தியா வழங்கவுள்ளஉணவுப் பொருட்களை எப்படி அனுப்புவது என்பது குறித்தும் மேனன் விவாதித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications