என்.எல்.சி. ஊழியர்கள் மீது போலீஸ் தடியடி
நெய்வேலி:வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெய்வேலி அனல் மின் கழக ஒப்பந்தஊழியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் என்.எல்.சி. பேருந்துகள், ஜீப் ஆகியவற்றைகல்வீசித் தாக்கி சேதப்படுத்தினர்.
என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 13,000 ஒப்பந்த தொழிலாளர்களும்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்குஆதரவாக நேற்று இரவு முதல் நிரந்தர ஊழியர்களும் ஒரு நாள் அடையாளவேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் சங்கங்கள்பங்கேற்கவில்லை. இவர்கள் பணிக்கு வர பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
நேற்று இரவு பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு என்.எல்.சி.பேருந்து வந்தது. அதில் சில ஒப்பந்த ஊழியர்களும் இருந்ததாகத் தெரிகிறது.இதையடுத்து ஆத்திரமடைந்த ஒப்பந்த ஊழியர்கள் பேருந்தை மறித்து நிறுத்தினர்.
ஒப்பந்த ஊழியர்களை கீழே இறக்கி விட்ட பின்னர் பேருந்தை ஓட்டிச் செல்லக்கோரினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் ஊழியர்களைஅங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் ஊழியர்கள் போக மறுத்துபோராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஊழியர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.கோபமடைந்த ஊழியர்கள் என்.எல்.சி. பேருந்துகள் மூன்றை கல்வீசித் தாக்கினர்.இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன.
மேலும் ஒரு ஜீப், வேனும் சேதமடைந்தன. இச் சம்பவத்தையடுத்து போலீஸாருடன்,மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்களும் பாதுகாப்புப பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதால், சுரங்கப் பணிகள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன. நிலக்கரி வெட்டியெடுக்கும் பணியும், அதை மின்நிலையத்துக்கு அனுப்பும் பணியும் பாதிக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தியும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications