கேரளம், கர்நாடகத்துக்கு ராமதாஸ் கண்டனம்
திண்டிவனம்:கேரள அரசு தொடர்ந்து அடாவடியாக நடந்து வருவதால், டெல்லியில் கேரளமுதல்வருடன் நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில், முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், நமது முதல்வர் கருணாநிதி திறந்த மனதுடன் முல்லைப் பெரியாறுஅணை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முன் வந்துள்ளார்.
ஆனால் கேரள முதல்வரோ, தமிழகத்திற்கு தண்ணீரே கொடுக்கக் கூடாது என்றமுடிவோடு செயல்படுகிறார். ஒரு டிஎம்சி தண்ணீர் கொடுப்பதற்கே இவ்வளவுபிடிவாதம் பிடிக்கும் கேரள அரசு, காவிரிப் பிரச்சினையில் பிடிவாதம் காட்டுகிறகர்நாடக அரசு ஆகியவை, தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு ஒத்துழைக்குமாஎன்பது சந்தேகம்தான்.
நதி நீர் இணைப்புக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவது கேரளம், கர்நாடகம்தான்.இரு மாநிலங்களிலும் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளில் 4,000 டிஎம்சி தண்ணீர்வீணாக கடலில் கலக்கிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் 10 சதவீதத்தைதமிழகத்திற்குத் திருப்பி விட்டால் தமிழகத்தின் தண்ணீர்த் தேவை பூர்த்தியாகி விடும்.
இந்த இரு மாநிலங்களையும் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் நதிகளைநாட்டுடமையாக்கி விட வேண்டும். அப்போதுதான் நதி நீர் இணைப்பும்சாத்தியமாகும்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியதும், அதை பராமரித்து வருவதும்தமிழகம்தான். ஆனால் தமிழக அரசுக்குத் தெரியாமல் கேரள அரசு அணையில்சென்று ஆய்வு செய்வது அத்துமீறிய செயல்.
இப்படி தொடர்ந்து அத்துமீறலிலும், மோதல் போக்குடனும் கேரள அரசு செயல்பட்டுவருவதால், டெல்லி பேச்சுவார்த்தைக்கு முதல்வர் கருணாநிதி போகவே கூடாது.உச்சநீதிமன்ற அடிப்படையில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
ஓமலூரில் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்திருப்பது சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகளும்,சிறுபான்மை எதிர்ப்பாளர்களும் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் வன்முறையில்ஈடுபட்டுள்ளனர். பள்ளியைத் திறக்க முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்யவேண்டும்.
உயர் கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் பாமக மட்டுமே உறுதியாகஇருக்கிறது. எந்தத் தடுமாற்றம் இல்லாமல் இருக்கிறது.
ஒரே தவணையில் 27 சதவீத ஒதுக்கீட்டையும் அமல்படுத்துவோம் என்று மே 23ம்தேதி கூறிய மத்திய அரசு, இப்போது தவணை முறையில் அதை அமல்படுத்துவதுஏன் என்று டெல்லியில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள்,இடதுசாரித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எங்களது கட்சியின்பிரதிநதியான ராமதாஸ் எம்.பி. கேட்டுள்ளார். ஆனால் யாரிடமும் பதில் இல்லைஎன்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications