புழலுக்கு மாறுகிறது சென்னை மத்திய சிறை
சென்னை:சென்னை அருகே புழல் பகுதியில் நவீன முறையில் கட்டப்பட்டுள்ள புதிய சிறைக்கு,சென்னை மத்திய சிறைச்சாலை இடம் பெயருகிறது. இதனை ஞாயிற்றுக்கிழமைமுதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
சென்னை மத்திய சிறை தற்போது சென்டிரல் ரயில் நிலையம் அருகே கூவம்நதிக்கரையோரம் (சாக்கடை) உள்ளது. மிகவும் நெருக்கடியான இடத்தில் உள்ளமத்திய சிறையில் அதிக கைதிகளை அடைத்து வைக்க முடியாத நிலை உள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை அருகே புழல் என்ற இடத்தில் புதிய சிறைச்சாலைகட்டப்பட்டு வந்தது. ரூ. 77 கோடி செலவில் 212 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைச்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட அதி நவீன வசதிகளுடன், வித்தியாசமானவடிவமைப்பில் உருவாகியுள்ள இந்த சிறை வளாகத்தில் தண்டனை பெற்றகைதிகளுக்கும், விசாரணைக் கைதிகளுக்கும் தனித் தனியாக கட்டடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்காக தனி பிரிவும் உள்ளது.
இங்கு 3,000 கைதிகளை அடைக்கலாம். கைதிகளின் அறைகளில் மின் விசிறிவசதியும் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நூலகம், தொழிற் கூடங்கள், பூங்காக்கள்,உடற்பயிற்சிக் கூடம், பள்ளிக் கூடம், கம்ப்யூட்டர் அறைகளும் இடம் பெற்றுள்ளன.
உள்ளேயே ஒரு நீதிமன்றமும் நிறுவப்பட்டுள்ளது. அதி நவீனமாக கட்டப்பட்டுள்ளஇந்த சிறை வளாகத்தை முதல்வர் கருணாநிதி நாளை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமைச் செயலாளர்திரிபாதி, உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா, டிஜிபி முகர்ஜி, சிறைத்துறை ஐஜிபாலச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
சிறை திறப்பு விழாவையொட்டி மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் புழல்சிறை வளாகத்தை சுற்றிப் பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்.
புழல் சிறை திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் பழைய மத்திய சிறை வளாகத்தில் உள்ளஅத்தனை கைதிகளும் இங்கு கொண்டு வந்து அடைக்கப்படுவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications