கடற்படை தலையிட்டது ஏன்?: வைகோ ஆவேசம்
டெல்லி:யாருடைய தைரியத்தில் இந்திய கடற்படை முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யச் சென்றது என்பதுகுறித்து விசாரிக்க வேண்டும் என பிரதமரிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் கோரிக்கைவிடுத்தார்.
டெல்லியில் பிரதமரை சந்தித்த வைகோ அவரிடம் தந்த மனுவின் விவரம்:
தமிழகத்துச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த விடமாட்டோம் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
கேரள முதல்வர் பெயரளவில் வேண்டுமானால் காம்ரேடாக (கம்யூனிஸ்டாக)இருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை அவரால் ஒருக்காலும்சகித்துக் கொள்ளவில்லை. முல்லை பெரியாறு அணையில் உள்ள நீரைப் பெறுவதற்கு999 ஆண்டுகள் ஒப்பந்தம் உள்ளது. அந்த உரிமையைதான் கேட்கிறோம்.
அச்சுதானந்தனின் வேண்டுகோளின் பேரில் இந்திய கடற்படையினர் அணையின் நீர் அழுத்தத்தைஅளப்பதற்காக வந்து போயுள்ளனர். இது மத்திய அரசின் உரிமைகளை நசுக்குகின்ற, இன்னொரு மாநிலத்தின்உரிமையில் தலையிடுகின்ற செயலாகும்.
இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும் செயல் இது. கேரள முதல்வரின் ஆணையை ஏற்றுஇச்செயலில் கடற்படையினர் ஈடுபட்டது மிகவும் வருந்தத்தக்கது. கடற்படையினர்ஏன் அணையை ஆய்வு செய்யச் சென்றார்கள்? யாருடைய தைரியத்தில் இவ்வாறுசென்றார்கள் என்பது குறித்து பிரதமர் விசாரிக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல், இந்திய ஒருமைப்பாடுகேள்விக்குறியாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் நீரின் உயரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறியாமல் இரு மாநிலமுதல்வர்களுக்கும் இடையே டெல்லியில் பேச்சு நடப்பது என்பது எந்த பயனையும் அளிக்காது.
நீரின் மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும். தமிழகத்துக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டினால் தமிழத்தின் ஐந்து தென்மாவட்டங்கள்பஞ்சப் பிரதேசங்கள் ஆகிவிடும் என்று கூறியுள்ளார் வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications