பாஜக தலைவராக ராஜ்நாத் மீண்டும் தேர்வு
டெல்லி:பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக ராஜ்நாத் சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக தலைவர் பதவியிலிருந்து அத்வானி விலகினார். இதைத் தொடர்ந்துமுன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்நாத் சிங் புதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம்முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
ராஜ்நாத் சிங்கையே மீண்டும் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதரவுதெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது.
இந்த நிலையில் இன்று காலை வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ராஜ்நாத் சிங் தொண்டர்கள் புடைசூழ வந்துவேட்பு மனு தாக்கல் செய்தார். அவரைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் ராஜ்நாத் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும்அதிகாரியான ஓ.பி.கோலி அறிவித்தார். மொத்தம் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும்,அத்தனையும் ராஜ்நாத் சிங்குக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு ராஜ்நாத் சிங் தலைவர் பதவியில் இருப்பார். இதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங்குக்குமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்துவாழ்த்து தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications