பெரியாறு: டெல்லியில் துரைமுருகன் ஆலோசனை
சென்னை:உச்சநீதிமன்றத்தில் நாளை முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்குவிசாரணைக்கு வரவுள்ளதால், அதுகுறித்து வழக்கறிஞர்களுடன் விவாதிக்க தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்கள்கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை 29ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. மத்தியநீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில் பேச்சுவார்த்தைநடைபெறுகிறது.
இந்த நிலையில், கேரள அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அம்மாநிலசட்டசபையில் நிறைவேற்றிய சட்ட மசோதா செல்லாது என்று அறிவிக்கக் கோரிதமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்குவருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் சார்பில் ஆஜராகவுள்ள வழக்கறிஞர்களுடன்துரைமுருகன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மேலும், மத்திய அரசு முன்னிலையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பானமுன்னேற்பாடுகளையும் கவனிக்கவுள்ளார் துரைமுருகன்.
துரைமுருகன் சென்ற அதே விமானத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் நேற்றுடெல்லி சென்றார்.
அரசியலாக்கும் கேரளா:
முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் பிரச்சினையைகேரள அரசு தேவையில்லாமல் அரசியலாக்குகிறது என தமிழக அரசுஉச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம். அணைநல்ல ஸ்திரத்தன்மையுடன்தான் உள்ளது. இதை மத்திய நீர்வளத்துறை நிபுணர்கள்உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இப்பிரச்சினையை தேவையில்லாமல் கேரள அரசுஅரசியலாக்குகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமாக கேரள சட்டசபையில் சட்ட மசோதாவைஅம்மாநில அரசு நிறைவேற்றியது இதை நிரூபிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications