என்.எல்.சி. ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
நெய்வேலி:நெய்வேலி அனல் மின் கழக (என்.எல்.சி) ஒப்பந்த தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று காலை முதல் ஊழியர்கள் வேலைக்குத் திரும்பினர்.
என்.எல்.சி. நிறுவனத்தில் 13,000 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு ஒரு மாதஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்கக் கோரியும், முன்பணமாக வழங்கப்பட்ட ரூ.1500 தொகையைசம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யக் கூடாது என்று கோரியும் அவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்ததப் போராட்டத்தில்ஈடுபட்டனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி முன்னிலையில நேற்று இரவுவிடிய விடிய முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடந்தது.
இப்பேச்சுவார்த்தையில், என்.எல்.சி. நிர்வாகம், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, போராட்டத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் வாபஸ் பெற்றனர்.
ஒப்பந்தப்படி, 8.33 சதவீத போனஸ் வழங்குவதற்கு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும், அதுவரைமுன்பணமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை சம்பளத்திலிருந்து நிர்வாகம் பிடித்தம் செய்யக் கூடாது.
வேலை நிறுத்த நாட்களை ஈடுகட்ட விடுமுறை நாட்களில் கூடுதலாக வேலை வாங்குவது, ஓவர் டைம்கொடுப்பது உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபடக் கூடாது என்று உடன்பாடு ஏற்பட்டது.
இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து நேற்று இரவே தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்த ஊழியர்கள்திரும்பப் பெற்றனர். இன்று காலை 6 மணி முதல் மீண்டும் வேலைக்குத் திரும்பினர். இதனால் என்.எல்.சி.யில்பணிகள் சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications