ஓமலூர் பள்ளி தாக்குதல்: முதல்வரிடம் அறிக்கை
சென்னை:சேலம் மாவட்டம் ஓமலூர் பள்ளியில் படித்து வந்த மாணவி சுகன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத்தொடர்ந்து அந்தப் பள்ளிக்கூடம் மீது நடந்த தாக்குதல் திட்டமிட்ட சதிச் செயல் என மாநில சிறுபான்மையினர்ஆணையம் முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஓமலூரில் உள்ள பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி சுகன்யா சிலநாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாகக் கிடந்தார். அவர் கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டதாக தகவல்கள் பரவின.
இதைத் தொடர்ந்து பெரும் திரளான மக்கள் கூட்டம் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து பள்ளியை சூறாைடியது.பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. கம்ப்யூட்டர் அறைக்கும் தீவைக்கப்பட்டது. இந்த சம்பவம்குறித்து விசாரிக்குமாறு மாநில சிறுபான்மை ஆணையத்தை முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சிறுபான்மை ஆணைய தலைவரான பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை, உறுப்பினர்கள்அப்துல் ரஹீம், வசந்தி ஸ்டேன்லி ஆகியோர் ஓமலூர் பள்ளிக்கூடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
பள்ளிக்கூட நிர்வாகிகள், ஆசிரியைகள், மாணவிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இந்த விசாரணை குறித்த தகவல்களை வின்சென்ட் சின்னத்துரை செய்தியாளர்களிடம் சென்னையில் விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட மாணவி சுகன்யா வேதியியல் பாடத்தில் வெறும் எட்டரைமதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் தனது தந்தை திட்டுவார் என்று பயந்து அவர் கிணற்றில்குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுகன்யா நீரில் மூழ்கிதான் இறந்தார், அவரது உடலில் காயம் ஏதும் இல்லை, அவர் கற்பழிக்கப்படவில்லை,அவரது கன்னித்திரை நல்லபடியாகவே இருந்தது என்று பிரேதப் பரிசோதனையிலும் தெளிவாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவி சுகன்யா தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் , மதிப்பெண் குறைந்ததால்தான் இந்தமுடிவை எடுத்துள்ளார் என்பது தெளிவாகிறது.
இந்த தற்கொலை சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பள்ளிக் கூடத்தின் மீது கூலிப்படையை ஏவிதிட்டமிட்ட தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்த வன்முறையால் ரூ. 1 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.இதற்கு முக்கியக் காரணம், இப்பள்ளிக்கு அருகே உள்ள இன்னொரு பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள்தான் என்றுகூறப்படுகிறது.
அந்தப் பள்ளிக் கூடத்திற்கு அதிக அளவில் மாணவிகள் வருவதில்லை என்பதால் அப்பள்ளியின் உரிமையாளர்சுகன்யா சம்பவத்தை பயன்படுத்தி திட்டமிட்டு பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு அவதூறு ஏற்படுத்தும்வகையில் இந்த தாக்குதலை தொடுத்துள்ளதாக தெரிகிறது.
கடந்த 43 ஆண்டுகளாக இந்தப் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இதுவரை ஒரு புகார் கூட இந்தப் பள்ளிக்கூடத்தின் மீது சுமத்தப்பட்டதில்லை. இங்கு மொத்தம் 3600 மாணவிகள் படிக்கிறார்கள். இதில் 200 பேர் மட்டுமேகிறிஸ்தவர்கள். மற்றவர்கள் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள்.
மத துவேஷத்துடன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். பள்ளிக்கு அருகே உள்ள மருத்துவமனை, பேராலாயம்ஆகியவற்றில் உள்ள இயேசு, மாதா படங்களையும் விஷமிகள் சிதைத்துள்ளனர். மதப் பிரச்சினையைஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதிச் செயல் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
இந்த தாக்குதல் சதி குறித்து முதல்வரிடம் விரிவான அறிக்கை கொடுத்துள்ளோம். சேத விவரங்கள் குறித்துவருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் தகவல் சேகரித்து உரிய இழப்பீடு வழங்குவதாகவும், பள்ளிக்கூடத்தைமீண்டும் திறந்து செயல்பட உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் முதல்வர் உறுதியளித்துள்ளார் என்றார்சின்னத்துரை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications