ராஜபக்ஷே: பாமக, வி.சிறுத்தைகள் போராட்டம்
சென்னைஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே டெல்லி வந்துள்ளார். ஐந்து நாட்களுக்கு அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொள்கிறார்.
தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாமக, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இன்று போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.
அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் போராட்டத்தைத்தொடங்கி வைத்தார்.
கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இதேபோல பாமக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், ராஜபக்ஷேவே திரும்பிப் போ என்றபதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மெமோரியல் ஹால் அருகே தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பின் சார்பில் கருப்புக் கொடி ஏந்தியபடிஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்:
இதற்கிடையில் ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து சென்னையில் நாளை தமிழ் இயக்கம் சார்பில்உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டம் வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறுகிறது. இப்போராட்டத்தை கவிஞர் வைரமுத்துதொடங்கி வைக்கிறார்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி, கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், கனிமொழி, எழுத்தாளர்கள்பிரபஞ்சன், சின்னக் குத்தூசி, ரவிக்குமார் எம்.எல்.ஏ, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பல்துறையினர் கலந்துகொள்கின்றனர்.
டெல்லியில் ராஜபக்ஷே: பிரதமரை சந்திக்கிறார்
இதற்கிடையில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே 5 நாள் பயணமாக சனிக்கிழமை இரவு டெல்லி வந்துசேர்ந்தார்.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையைஇலங்கை அரசு மூடி விட்டது. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களுக்குபெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. பட்டினியால் வாடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிபர் ராஜபக்ஷே நேற்று இரவு டெல்லிக்கு வந்தார். 5 நாள் பயணமாக அவர் இந்தியாவந்துள்ளார். விமான நிலையத்தில் ராஜபக்ஷேவை மத்திய வேதிப்பொருள் மற்றும் உரத்துறை இணை அமைச்சர்ஹண்டிக் வரவேற்றார். அமைச்சர் மணிசங்கர் அய்யரும் விமான நிலையத்திற்கு வந்திருந்து ராஜபக்ஷேவைவரவேற்றார்.
இன்று இரு நிகழ்ச்சிகளில் ராஜபக்ஷே கலந்து கொள்கிறார். டேராடூன் நகரில் இன்று முதல் 3 நாட்களுக்குநடைபெறும் ஆசிய மேயர்கள் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டை தமிழகத்தைச் சேர்ந்த6 மேயர்களும் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக மேயர்கள்இதில் பங்கேற்கக் கூடாது என பாமக மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று 6மேயர்களும் மாநாட்டைப் புறக்கணித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரின் மகள் யாமினிக்கும், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கிருஷ்ணகுமாரின் மகன் ஆதர்ஷுக்கும் டெல்லியில் இன்று திருமணம் நடைபெறுகிறது. அதிலும் ராஜபக்ஷேகலந்து கொள்கிறார். இந் நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் விக்கிரமசிங்கேவும் கலந்து கொள்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தனது இந்திய பயணத்தின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் விரிவாகவிவாதிக்கவுள்ளார் ராஜபக்ஷே. தமிழர் பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை எப்படி வழங்குவது என்பது குறித்துராஜபக்ஷேவுடன் பிரமதரும் ஆலோசிக்கவுள்ளார்.
ராஜபக்ஷேவின் பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி ஆகியோரையும் ராஜபக்ஷே சந்திக்கிறார்.
இந்த நிலையில் ராஜபக்ஷேவின் வருகையை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டங்கள்நடந்தன. சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கூடி கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜபக்ஷேவின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டது.
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் பல்வேறு இடங்களில் ராஜபக்ஷே கொடும்பாவிஎரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
வைகோ இன்று டெல்லியில் உண்ணாவிரதம்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில், ராஜபக்ஷேவுக்குஎதிர்ப்பு தெரிவித்து கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications