மாணவி தற்கொலை முயற்சி: மீட்ட ஆசிரியைகள்
திருச்செங்கோடு:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தேர்வில் காப்பி அடித்து பிடிபட்டதைத் தொடர்ந்து மாடியிலிருந்துகுதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிளஸ் ஒன் மாணவியை, பள்ளி ஆசிரியர்கள் சமயோஜிதமாகசெயல்பட்டு காப்பாற்றினர்.
திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருபவர் லெஸ்ஸி ஜான். கன்னியாகுமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர் லெஸ்ஸி. இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.
இப்பள்ளியில் தேர்வு நடந்தது. இதில் கலந்து கொண்டு எழுதிய லெஸ்ஸி, பிட் அடித்துள்ளார். இதைப் பார்த்துவிட்ட ஆசிரியை லெஸ்ஸியை கடுமையாக கண்டித்துள்ளார். பின்னர் தேர்வுக் கூடத்தை விட்டு அவரைவெளியேற உத்தரவிட்டார்.
இதனால் அவமானமடைந்த லெஸ்ஸி பள்ளியின் 3வது மாடிக்கு விரைந்தார். அங்கு சென்று மேலிலிருது குதித்துத்தற்கொலை செய்யப் போவதாக ஆவேசமாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கீழ் தளத்தில் ஆசிரியைகள், மாணவிகள் பெரும் திரளாக கூடி விட்டனர். லெஸ்ஸியை கீழே இறங்கி வருமாறுஅவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர் முடியாது என்று கூறி விட்டார். இதையடுத்து உஷாரானஆசிரியைகள், விடுதி அறைகளிலிருந்த படுக்கைகள், மெத்தை விரிப்புகள், தலையணைகள் உள்ளிட்டவற்றைக்கொண்டு வந்து கீழே போட்டனர்.
இதைப் பார்த்ததும் லெஸ்ஸி மேலிலிருந்து கீழே குதித்தார். ஆனால் முன் யோசனையாக படுக்கைகள்,தலையணைகளை ஆசிரியைகள் போட்டு விட்டதால் லெஸ்ஸி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பின்னர்அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை கொடுக்கப்பட்டது.
ஓமலூரில் ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில்திருச்செங்கோட்டில் ஆசிரியைகளின் சமயோஜிதத்தால், ஒரு மாணவியின் உயிர் காக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications