மீண்டும்-இந்தியாவுக்கு தொடரும் தோல்வி

Subscribe to Oneindia Tamil

கேப்டவுன்:தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதிய 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா மோசமான தோல்வியைசந்தித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் ஒரு நாள் போட்டிமழை காரணமாக ரத்தாகி விட்டது. டர்பனில் நடந்த 2வது போட்டியில் இந்திய அணி படு மோசமாக விளையாடி91 ரன்களில் சுருண்டு பெரும் தோல்வியை சந்தித்து, நாட்டு மக்களின் ஒட்டுமொத்த கோபத்தை சம்பாதித்துக்கொண்டது.

இந்த நிலையில், 3வது ஒரு நாள் போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணிஇந்திய பந்துவீச்சாளர்களின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் திணறியது.

ஜாகிர்கான் அபாரமாக பந்துவீச்சி முதல் இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்து தென் ஆப்பிரிக்க அணிக்குஅதிர்ச்சி அளித்தார். ஆனால் நடுக்கள வீரர்கள் சமாளித்து அணியின் சரிவை நிறுத்தி மளமளவென ரன்களைசேர்க்க ஆரம்பித்தனர். குறிப்பாக கிப்ஸ், டிவில்லியர்ஸ் நிதானமாக ஆடி அணியை நிலை நிறுத்தினர்.

ஆனால் பின்னர் வந்த கெம்ப் படு அபாரமாக ஆடி சதம் அடித்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டுசென்றார். ஆட்டமிழக்காமல் அவர் எடுத்த 100 ரன்களும், பந்துவீச்சாளர் ஹால் எடுத்த 56 ரன்களும் தென்ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்புக்கு வித்திட்டது.

இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 274 ரன்களைசேர்த்தது.

கடுமையான இலக்குடன் பின்னர் களம் இறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பம் முதலே பேரிடியாக இருந்தது.தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் அதிரடியாக ஆட முயன்று ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.நம்பிககை நாயகன் சச்சினும் நேற்று பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தார். 2 ரன்களை மட்டுமே எடுத்த அவர்போலக் பந்தில் வீழ்ந்தார்.

கேப்டன் டிராவிட் மட்டும் நிலைத்து நிதானமாக ஆட ஆரம்பித்தார். படு நிதானமாக ஆடிய டிராவிட் ரன்களைமெதுவாக சேர்க்க ஆரம்பித்தார். ஆனால் மறு முனையில் வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். டோணிகொஞ்சம் டிராவிடுக்கு துணையாக ஆடினார். இருவரும் தலா 63 ரன்களையும், 55 ரன்களையும் சேர்த்தனர்.

டோணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று கொஞ்சம் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அவர் ரன்எடுத்த வேகத்தைப் பார்த்தபோது எப்படியாவது ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்தது.

ஆனால் அவர் அவுட் போன போது ரசிகர்களின் நம்பிக்கையும் போய் விட்டது. தட்டுத் தடுமாறி ரன் சேர்த்துவந்த இந்தியா 41.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்து 106 ரன்வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது.

சதம் அடித்த கெம்ப் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஒரு நாள் போட்டி போர்ட் ஆப்எலிசபெத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதிலும் தென் ஆப்பிரிக்கா வென்றால் ஒரு நாள் தொடரைவென்று விடும். அதேசமயம், மற்ற இரு போட்டிகளிலும் இந்தியா வென்றால் கூட போட்டித் தொடரை வெல்லமுடியாது, டிராதான் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+