திறக்கப்பட்டது புதிய புழல் மத்திய சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே புழலில் அமைக்கப்பட்டுள்ள புதிய அதி நவீன மத்திய சிறை வளாகத்தை முதல்வர் கருணாநிதிதிறந்து வைத்தார்.சென்னை அருகே உள்ள புழலில் ரூ. 77 கோடி மதிப்பீட்டில் 212 ஏக்கர் பரப்பளவில் புதிய மத்திய சிறையைநிர்மாணிக்க கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. பணிகள் முடிந்துதற்போது சிறைதிறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி புதிய சிறையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர்பேசுகையில், சிறைச்சாலை என்பது குற்றவாளிகளை தண்டிக்கிற இடம், கொடுமைப்படுத்துகிற இடம், சித்திரவதைசெய்யப்படுகிற இடம் என்றெல்லாம் ஒரு காலத்தில் நிலை இருந்தது.

அது மெல்ல மெல்ல மாறி பயிற்சி அளிக்கிற இடமாக, பண்புகளை கற்பிக்கிற இடமாக , வாழ்க்கையை எப்படிவாழ வேண்டும் என்று போதிக்கிற இடமாக மாற வேண்டும். அப்போதுதான் சிறைச்சாலைகளை அமைத்ததன்நோக்கம்நிறைவேற முடியும்.

3000 பேர் இந்த சிறைச் சாலையில் இனிமேல் தங்குவதற்கேற்ற வகையில் அவர்களை இங்கே தண்டிக்கிறவகையில், அடைக்கப்பட்டாலுங்கூட, நல்ல சுவாசக் காற்றை பெறுகின்ற நிலையிலும், நல்ல சுகாதாரத்தைஅடைகின்ற நிலையிலும்இந்த வளாகம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரிய ஒன்றாகும். இதை நான் பாராட்டகடமைப்பட்டிருக்கிறேன்.

நாங்கள் இப்போது இங்கு இல்லை என்றால், சிறைச்சாலையில் ஒருவேளை இருந்திருப்போம். சிறைச்சாலைஎத்தனை கொடுமைகளை இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்கின்ற எங்கள் இயக்கத்திற்கு இழைத்திருக்கிறது,இழைக்கப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இன்றைக்குக் கூட நான் கிளம்புகிறபோது, என்ன உடையெல்லாம் அழுக்காக இருக்கிறதே, மாற்றிக் கொண்டுசெல்லக் கூடாது என்று வீட்டிலே கேட்டார்கள். சிறைக்குத்தானே போகிறேன், இந்த உடையே போதும் என்றுசொல்லி விட்டுவந்தேன்.

பழைய சிறைச் சாலையை வேறு ஒரு காரியத்திற்கு பயன்படுகிற வகையில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.பொது மருத்துவமனையை விஸ்தரித்து அங்கே சில பகுதிகளை பழைய சிறைச் சாலை இருந்த இடத்திலேஅமைக்கலாமா என்றயோசனை அரசிடம் உள்ளது.

இப்போது பொது வழ்க்கையில் இருக்கின்ற அரசியல் கட்சிக்காரர்களுக்கே ஒரு சங்கடம். மறியல் என்கிறோம்,ஆர்ப்பாட்டம் என்கிறோம், போராட்டம் என்கிறோம். காலையில் கைது செய்யப்படுகிறோம், மாலையிலேயேவிட்டுவிடுகிறார்கள். எங்களுக்கே அதில் சங்கடம். கைது செய்து விட்டார்கள், சிறைக்குப் போகப் போகிறோம் என்றுநண்பர்கள் எல்லாம் கருதிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டில் கூட போகும்போது போய் வாருங்கள், ஏதோ யுத்தத்திற்குப் போகும் கட்டபொம்மனை வழியனுப்பியதுபோல வழியனுப்பி வைத்தார்கள். மாலையில் வீட்டுக்குப் போக நமக்கே வெட்கமாக இருக்கிறது. அப்படிவருகின்றவர்களைபோலீஸார் உடனடியாக அனுப்பி விடுவதற்குக் காரணம் சிறையிலே போதுமான இடம் இல்லாததால்தான்.இனிமேல் அந்தக் குறை இருக்காது என நம்புகிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+