பரங்கிமலை சர்ச் வளாகத்தில் ஊழியர் படுகொலை
சென்னை:சென்னை அருகே பரங்கிமலை மீதுள்ள, புனித தோமையர் மலை பேரலாய வளாகத்தில் உள்ள புத்தக விற்பனைநிலையத்தில் பணியாற்றி வந்த ஜேக்கப் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள புனித தோமையர் மலையில் உள்ள பேராலயம் மிகவும் பிரபலமானது. இயேசு நாதரின்சீடரான புனித தோமையர் இங்கு அமர்ந்து உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த மலை மீது பேரலாயம்ஒன்றும் உள்ளது.
பேராலய வளாகத்தில் புத்தக விற்பனை நிலையம் உள்ளது. இங்கு ஜேக்கப் என்பவர் மேலாளராக பணியாற்றிவந்தார். நேற்று மாலை ஒரு வாலிபர் ஜேக்கப்பைப் பார்க்க வந்துள்ளார். அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த நபர் திடீரென ஜேக்கப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அந்த நபர் தன்னிடமிருந்த கத்தியைஎடுத்து ஜேக்கப்பை சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த வேலைக்காரப் பெண் லில்லி மேரிபோட்ட கூச்சலால் அங்கு ஏராளமானவர்கள் திரண்டு விட்டனர்.
அனைவரும் சேர்ந்து அந்த நபரைப் பிடிக்க முயன்றனர். ஆனால் யாராவது வந்தால் குத்தி விடுவேன் என்று கூறிஅவர் மிரட்டியதால் பயந்து போய் பிடிக்காமல் விட்டு விட்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த நபர்படிக்கட்டுகள் வழியாக கீழே ஓடி விட்டார்.
இதைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ஜேக்கப்பை மீட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜேக்கப் உயிரிழந்தார்.
பரங்கிமலை மீதுள்ள பேராலய வளாகத்தில் நடந்த இந்தக் கொலையால் பரங்கிமலை பகுதியில் பரபரப்புஏற்பட்டது. கொலை செய்யுப்பட்ட ஜேக்கப்புக்கு மனைவி, 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணைநடத்தினர். இந்தக் கொலைக்குப் பின்னணியில் தனிப்பட்ட பகை காரணமாக இருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications