எம்ஜிஆர் சிலை: டெல்லி செல்லும் ஜெ
சென்னை:அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் டிசம்பர் 7ம் தேதிதிறக்கப்படுகிறது. இதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகிற 6ம் தேதி டெல்லி செல்கிறார்.
நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை வைக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி சமீபத்தில்வழங்கப்பட்டது. ஏற்கனவே சிலை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்ற நூலகத்தில் திறப்பு விழாவுக்காக காத்துள்ளது.
சமீபத்தில்தான் சிலை வைக்க அனுமதி கிடைத்தது. தற்போது வைக்கப்பட்டுள்ள நூலக வளாகத்திலேயே சிலைநிறுவப்படவுள்ளது.
எம்ஜிஆர் சிலை டிசம்பர் 7ம் தேதி திறக்கப்படவுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்சிலையைத் திறந்து வைக்கவுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங், லோக் சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிஉள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா டிசம்பர் 6ம் தேதி டெல்லி செல்கிறார். தனி விமானம்மூலம் அன்று மாலை அவர் டெல்லி செல்கிறார்.
அதிமுகவினால் கரும்பு விலை உயர்வு:
இதற்கிடையில் கரும்பு விலையை உயர்ந்தவிட்டால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனஅறிவித்ததால் தான், கருணாநிதி கரும்பு விலையை உயர்த்தி இருக்கிறார் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கரும்பு விவசாயிகள் பிரச்சனைக்காக அதிமுக போராட்டம் நடத்தும் என நான் அறிவித்ததால், கருணாநிதிகரும்பு விலையை உயர்த்தி இருக்கிறார். என ஆட்சியில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 1014 ரூபாய் என்றுஅறிவித்ததை கருணாநிதி இல்லை என்று கூறினார்.
அதற்கு நான் தமிழக சட்டப்பேரவையில் 26.09.2005 அன்று இது குறித்து தெரிவித்த அறிக்கை பேரவைநூலகத்தில் கிடைக்கும் என்றும், இந்த விலை நிர்ணய அரசாணையும் உண்டு என்று எனது முந்தையஅறிக்கையில் கூறினேன்.
எனது அறிக்கை வெளிவந்த பிறகு கருணாநிதி மீண்டும் ஏதாவது பதில் அறிக்கை வெளியிடுவார் எனஎதிர்ப்பார்த்தேன். ஆனால் எனது அறிக்கையில் இருந்த உண்மை அறிந்து எனது அரசு வழங்கிய 1014ரூபாயுடன் மேலும் 11 ரூபாயை சேர்ந்து 1025 ரூபாய் என்றும் 9% பிழி திறனுக்கு மேல் 0.01% அதற்கு மேலும்உள்ளவற்றிற்கு கூடுதலாக உள்ள ஒவ்வொரு புள்ளிக்கும் 9 ரூபாய் என உத்தரவிட்டு இருக்கிறார்.
கரும்பு விவசாயிகளுக்காக நான் போராட்டம் நடத்த போகிறேன் என்று அறிவிக்காமல் இருந்து இருந்தால்கரும்புக்கு டன் ஒன்றுக்கு 200 ரூபாய் விலை குறைப்பை கருணாநிதி நடைமுறைப்படுத்தி இருப்பார்.
இந்த விலை நிர்ணயம் முன் தேதியிட்டு ஏற்கனவே 802 ரூபாய் 50 காசு என்று வழங்கப்பட்டு இருந்தால் அதுரத்தாகிறது என்றும், தற்போது நிர்ணயித்துள்ள கூடுதல் விலை வழங்கப்படும் என்று அறிவித்ததன் மூலம் விலைகுறைப்பு நடந்தது உண்மை என்று கருணாநிதி ஒத்துக் கொள்கிறார் என்றார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications