முல்லைப் பெரியாறு பேச்சுவார்த்தை தோல்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில், முதல்வர் கருணாநிதி,கேரள முதல்வர் அச்சுதானந்தன் இடையே இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக அதிகரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் அதை ஏற்காத கேரள அரசு, 136 அடிக்கு மேல் நீர்மட்டத்தை அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றியது.

TN CM Karunanidhi, Central water resources minister Souz, Kerala CM Achudhananthan

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. இந்த நிலையில் அணை விவகாரம்தொடர்பாக உச்சநீதிமன்ற ஆலோசனைப்படி கேரள அரசுடன், மத்திய அரசு முன்னிலையில் பேசிப் பார்ப்பதுஎன்ற முடிவுக்கு தமிழக அரசு வந்தது.

இதையடுத்து மத்திய நீர் வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் தமிழகம் மற்றும் கேரளமுதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தையில் கருணாநிதியுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்,மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பொதுப்பணித்துறை செயலாளர்ராஜரத்தினம் உள்ளிட்டோர் அடங்கிய குழு பங்கேற்றது.

கேரள தரப்பில் முதல்வர் அச்சுதானந்தன், நீர்ப்பாசனத் துறை அமைச்சர்பிரேசமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பங்கேற்றது.

பேச்சுவார்த்தையின்போது கருணாநிதி கூறுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துகேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய கேரளஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீரைத் தேக்கினால் அணைஉடைந்து விடும் என கேரள அரசு கூறுவது ஏற்புக்குரியதாக இல்லை. அப்படி பீதியைகிளப்பக் கூடாது.

புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட எந்த அணையும் உடைந்ததாக சரித்திரமேஇல்லை. உச்சநீதிமன்ற ஆணையை முழு மனதுடன் செயல்படுத்த கேரள அரசுஒத்துழைக்கும் என நம்புகிறேன் என்றார்.

அச்சுதானந்தன் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136அடிக்கு மேல் உயர்த்துவது சாத்தியமல்ல. அதற்குப் பதிலாக தற்போதைய அணைக்குஅருகே புதிய அணையை கட்டலாம். 142 அடிக்கு நீர் தேக்கினால் லட்சக்கணக்கானமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றார்.

கேரள தரப்பின் இந்த பிடிவாதப் போக்கு காரணமாக 90 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்தது.

பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம்பேசுகையில், இரு மாநில பொதுப்பணித்துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசதிட்டமிடப்பட்டுள்ளது.

அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மீண்டும் இரு மாநிலமுதல்வர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்றார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முல்லைப் பெரியாறு பேச்சுவார்த்தை, எதிர்பார்த்ததுபோலவே, கேரளாவின் திமிர் காரணமாக தோல்வியில் முடிந்து விட்டது.

முன்னதாக இன்றைய பேச்சுவார்த்தையில் தமிழக குழுவில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில்கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்புதெரிவித்தது.

மத்திய அரசின் மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எனவே மாநிலஅரசின் சார்பில் மத்திய அமைச்சர்கள் யாரும் இடம்பெறக் கூடாது என்று கேரளாகூறியது. இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் பேச்சுவார்த்தையில் இடம் பெறவில்லை.

முன்னதாக நேற்று மாலை டெல்லி வந்த கருணாநிதி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளேன். சுமூக தீர்வு ஏற்பட முயற்சிப்பேன் என்றார்.

ஆனால், திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி கிளம்பிய கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன்கூறுகையில், 142 அடி வரை நீரைத் தேக்கினால் பல லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். பாதுகாப்பற்றநிலை உருவாகும். எனவே தற்போதுள்ள அணைக்கு அருகே புதிய அணையைக் கட்டிக் கொள்ளுமாறு தமிழகஅரசை நாங்கள் வலியுறுத்தவுள்ளோம். இதுதான் கேரளாவின் நிலை என்றார்.

பேச்சுவார்த்தைக்கு முன்பே ஒரு திட்டவட்டமான சிந்தனையோடு கேரள குழு டெல்லி வந்ததால் இந்தப் பேச்சால்ஒரு பயனும் ஏற்படாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே நடந்துள்ளது.

இதற்கிடையே டெல்லி பேச்சுவார்த்தையின் முடிவின் எதிரொலியாக கேரள எல்லையில் உள்ள தமிழகபகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் குதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அப்பகுதிகளில் போலீஸ்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் கருணாநிதி சந்தித்துப் பேசுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+