ஓமலூர் வன்முறை-கிறிஸ்தவர்கள் போராட்டம்
சென்னை:ஓமலூர் பாத்திமா மகளிர் பள்ளிக்கூடத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்து டிசம்பர் 3ம் தேதி தமிழகம் முழுவதும்உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, செயலாளர் பேராயர் சிங்கராயன்,சென்னை மறைமண்டல பேராயர் சின்னப்பா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் இதுகுறித்துதெரிவித்ததாவது:
சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் பள்ளியில் படித்து வந்த மாணவி சுகன்யா இறந்த சம்பவம் மிகவும்வேதனைக்குரியது. அவரது இறப்பு வருத்தத்திற்குரியது. ஆனால் அந்த நிகழ்வைத் தொடர்ந்து நடந்தசம்பவங்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறையாகும்.
இந்த சம்பவத்தால் அந்தப் பள்ளிக்கு சுமார் ஒன்றரை கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம்தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை, வேதியியல் ஆசிரியை, அலுவலக பணியாளர், விடுதிக் காவலர்ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைை வாபஸ் பெற வேண்டும்.
இந்த வன்முறைத் தாக்குதல் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிதலைமையில் இந்த விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.
மாணவியின் சாவு குறித்து மட்டுமல்லாது, திட்டமிட்ட சதி வன்முறைக்குக் காரணமானவர்கள் யார் என்பதையும்அந்த ஆணையம் கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பினைதமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவியின் சாவை திரித்துக் கூறி பள்ளி மீது வன்முறைத் தாக்குதலைத் தொடுத்தது, கிறிஸ்தவர்களையும்,திருச்சபையையும், கன்னியாஸ்திரிகளையும் இழிவுபடுத்தியதையும் கண்டித்தும் டிசம்பர் 3ம் தேதி தமிழகம்முழுவதும் உள்ள 17 முறை மாவட்ட கத்தோலிக்க தலைமையகங்களிலும் கருப்புக் கொடியுடன் ஜெபவழிபாடும், அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும்.
அதற்கு முன்பாக டிசம்பர் 2ம் தேதி கிறிஸ்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு கோரிபேரணியும் நடத்தப்படும் என்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications