பன்னாரி கோவிலுக்கு சங்கர் பித்ரி தங்க கத்தி
சேலம்:ஈரோடு மாவட்டம் பன்னாரியில் உள்ள பன்னாரி அம்மன் கோவிலுக்கு கர்நாடக கூடுதல் டிஜிபி சங்கர் பித்ரி ரூ.6.7 லட்சம் மதிப்புள்ள தங்கக் கத்தியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
வீரப்பனை வேட்டையாடிய கர்நாடக அதிரடிப்படைத் தலைவராக 1993ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரைஇருந்தவர் சங்கர் பித்ரி. வீரப்பனின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தவர் பித்ரி. பல தமிழர்களை வதைத்தவர் என்றகுற்றச்சாட்டுக்கு ஆளானவர்.
வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் கர்நாடக அரசு தனது மாநில அதிரடிப்படைக்கு ரூ. 8 கோடியை பரிசாகவழங்கியது. அதில் பித்ரிக்கு மட்டும் ரூ. 1.60 கோடி பரிசு கிடைத்தது. தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தில் ரூ. 20லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதப் பணத்தை பல்வேறு கோவில்கள், பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகளுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார் பித்ரி.
பண்ணாரியம்மன் கோவிலுக்கு ரூ. 6.7 லட்சம் மதிப்புள்ள 796 கிராம் எடையில் தங்கக் கத்தியை நன்கொடையாகஅளித்துள்ளார். இதேபோல மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு 808 கிராம் எடை கொண்ட தங்கக் கத்தியைநன்கொடையாக அளித்துள்ளார்.
கர்நாடக எம்.எம்.ஹில்ஸ் பகுதியில் உள்ள மாலே மகாதேவேஸ்வரா கோவிலுக்கு 800 கிராம் எடையுள்ள தங்கதிரிசூலத்தை வழங்கியுள்ளார். வீரப்பனை வெற்றிகரமாக வதம் செய்ய வேண்டும் என இந்த மூன்றுகோவில்களிலும் நேர்த்திகடன் செய்திருந்தார் பித்ரி.
இதுதவிர கர்நாடகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு ரூ. 60 லட்சத்தை நன்கொடையாகதந்துள்ளார் பித்ரி.
மேலும், கர்நாடக அதிரடிப்படையில் வீரப்பன் வேட்டையின்போது தனக்கு உதவியாக இருந்த வீரர்கள்,அதிகாரிகளுக்கு ரூ. 50 லட்சத்தை பகிர்ந்தளித்துள்ளார் பித்ரி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications