சசி பேரைச் சொல்லி ரூ. 35 லட்சம் மோசடி
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் உறவினர் என்று கூறிதொழிலதிபரிடம் ரூ. 35 லட்சம் மோசடி செய்த ஆசாமி கைது செய்யப்பட்டார்.
சென்னை எழும்பூரைச் சேர்ந்த முருகேசன் எக்சிம் ராஜாத்தி என்ற பெயரில் வெங்காயம், கடலை, சர்க்கரைஏற்றுமதி செய்து வருகிறார். இவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம்,மன்னார்குடியைச் சேர்ந்த விஜயகுமார், பம்மலைச் சேர்ந்த காயாரோகனம், தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் பாபுஆகியோரின் அறிமுகம் எனக்கு கிடைந்தது.
அப்போது விஜயகுமார் என்பவர் தன்னை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் என அறிமுகப்படுத்திகொண்டார். அப்போது அரசுக்கு சொந்தமான சர்க்கரை கூட்டுறவு சங்கத்திடம் இருந்து குறைந்த விலையில்சர்க்கரை வாங்கித் தருவதாக விஜயகுமார் கூறினார். இதற்கு ரூ. 3.5 கோடி கமிஷன் கேட்டனர். நான் முதல்கட்டமாக ரூ. 35 லட்சம் கொடுத்தேன்.
சர்க்கரை பெறுவதற்கான உரிமம் பெற்ற பின் முழுப் பணத்தையும் கொடுக்கிறேன் என்று சொன்னேன். ஆனால்அவர்கள் சென்னபடி எனக்கு உரிமமும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள்3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். இதே போல்கீழ்பாக்கத்தில் தொழில் அதிபர் சண்முகம் என்பவரிடம் அரசு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.1.2 கோடி மோசடிசெய்ததாக இந்த 3 பேரின் மீதும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
இதில் காயாரோகனம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பாபு ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.விஜயகுமாரும் ஜாமீன் பொற்றவுள்ளார். இப்போது முருகேசனின் புகார் அடிப்படையில் பாபுவை போலீசார்தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாக உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications