பெரியாறு-சோனியா உதவ கருணாநிதி கோரிக்கை
சென்னை:முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு தமிழகத்திற்குநியாயம் கிடைக்க உதவ வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள முதல்வர்களிடையே நேற்றுடெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் ஜோஸ் முன்னிலையில் நடந்தஇப்பேச்சுவார்த்தையில், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சரும் மீண்டும் டெல்லியில் கூடிபேச்சுவார்த்தை நடத்துவது எனவும், அதில் உடன்பாடு ஏற்பட்டால் இரு மாநில முதல்வர்களுக்கும் தெரிவித்துஒப்பந்தம் போடுவது எனவும் மட்டுமே கூட்டத்தின் முடிவில் தீர்மானிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. ஒன்றரை மணி நேரம் பேசினோம்.
தமிழக அரசின் சார்பில் எங்களது கருத்துக்களை எடுத்து வைத்துள்ளோம். அவர்கள் அவர்களுடையகருத்துக்களை தெரிவித்தனர். விவாதத்தின் போது இரு வேறு கருத்துக்கள் வெளிப்பட்டாலும், முடிவில்நல்லெண்ணத்துடன் இந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.
இன்னும் 10 நாட்களில் மாநில அமைச்சர்கள் மட்டத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.அதற்கான தேதியை மத்திய அமைச்சர் சொல்லுவார். டெல்லியில்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.
இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சொல்ல முடியாது. உடன்பாட்டை நோக்கிச்செல்லும்போது, எந்தெந்த வழியை நோக்கிச் செல்லலாம் என்பதை எங்களுக்கு உணர்த்துவதற்கு இந்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை உதவும் என்று நம்புகிறேன்.
பேச்சுவார்த்தைக்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை. இது மெகா சீரியலாகவும் இருக்காது, சிறு கதையாகவும்இருக்காது என்றார் கருணாநிதி.
சோனியாவுடன் சந்திப்பு:
முன்னதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியை அவரதுஇல்லத்தில் சந்தித்து கருணாநிதி பேசினார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை உள்ளிட்டவை குறித்த சோனியாவுடன்கருணாநிதி விவாதித்தார்.
தமிழகத்திற்கு அதிக அளவில் அகதிகள் வருவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. சிவசங்கர மேனன்,நாராயணன் ஆகியோருடன் நடந்த பேச்சு குறித்தும் சோனியாவிடம் கருணாநிதி விளக்கினார். இந்தசந்திப்பின்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் உடனிருந்தார்.
மேலும், மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கையும் கருணாநிதி சந்தித்துப் பேசினார். தமிழ்செம்மொழி அறிவிப்பைத் தொடர்ந்து திருவள்ளுவர், தொல்காப்பியர் பெயரால் இரண்டு விருதுகளை வழங்கஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தை நிறுவவும் கேட்டுக் கொண்டார். அந்த ஆய்வு மையத்தைதிறந்து வைக்க வேண்டும் என்றும் அவரிடம் கோரினார். இந்த கோரிக்கைகளை அர்ஜூன் சிங் ஏற்றுக்கொண்டார். இதுதவிர உயர் கல்வியில் பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் அர்ஜூன் சிங்கிடம் கருணாநிதிவிவாதித்தார்.
பின்னர் கருணாநிதி நேற்று இரவே சென்னை திரும்பினார். நேராக அண்ணா அறிவாலயம் வந்த அவர் அங்கும்செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில்நடந்த விவரங்களை எல்லாம் சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அவரது உதவியைஎதிர்பார்க்கிறோம்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் அது நடுநிலையான ஒருதீர்ப்பு. ஒரு சாராருக்கு பாதகமாகவோ, ஒரு சாராருக்கு சாதகமாகவோ அளிக்கப்பட்ட தீர்ப்பல்ல.
உண்மை நிலை விளக்கங்களை ஏற்றுக் கொண்டு பல்வேறு ஆய்வுகள் மூலம் கிடைத்த ஆதாரங்களின்அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு. அந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று தான் கேரள அரசுபுதிதாக நிறைவேற்றிய சட்டத் திருத்தம்.
அதை ஏன் திருத்தினாய் என்ற விவாதத்திற்குள் போக நாங்கள் விரும்பவில்லை. பல்லாண்டு காலமாக முல்லைப்பெரியாறு வாயிலாக தமிழக விவசாயிகளின் பாசனத்துக்கும், இதை குடிநீராகவும், பயன்பட்ட தண்ணீரைதேவையான அளவு எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்பதற்குத்தான் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோம் என்றார் கருணாநிதி.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்தார்.
கேள்வி: கேரளாவுக்கு செல்லும் உணவுப் பொருட்களை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை 4ம் தேதி நடத்தப்போவதாக பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறாரே?
பதில்: இதுபற்றித் தெரியாது. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பிரச்சினை தீர பலரும் பலவிதங்களில்முயற்சிக்கிறார்கள்.
கேள்வி: அப்போராட்டத்தில் திமுகவும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளாரே?
பதில்: அவர் அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை. கிடைத்தால் பதில் அனுப்பப்படும்.
கேள்வி: போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கூறுவீர்களா?
பதில்: நான் யாருடைய உரிமையையும், போராட்ட மனப்பான்மையையும் அறவழியில் இருந்தால் தடுப்பதற்குமுனைய மாட்டேன்.
கேள்வி: பேச்சுவார்த்தையின்போது அச்சுதானந்தன் இணக்கமாக இருந்தாரா, உடும்புப் பிடியாக இருந்தாரா?
பதில்: அவருடன் கை குலுக்கிக் கொண்டதுதான் உடும்புப் பிடியாக இருந்தது. இருவரும் நீண்ட நேரமாககையை விடாமல் குலுக்கிக் கொண்டோம். அதுதான் உடும்புப் பிடியாக இருந்தது.
கேள்வி: இலங்கைப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திருமாவளவன்கூறியிருக்கிறாரே?
பதில்: அதுகுறித்து யோசிக்கப்படும்.
கேள்வி: இலங்கைப் பிரச்சினை குறித்து சோனியா காந்தியுடன் பேசினீர்களா?
பதில்: தற்போது இலங்கையில் நடைபெறும் நிலவரங்களை சொன்னேன். அண்மையில் சிவசங்கர மேனனும்,எம்.கே.நாராயணனும் என்னை வந்து சந்தித்ததைப் பற்றித் தெரிவித்தேன்.
கேள்வி: தனித் தமிழ் ஈழம் மட்டுமே பிரச்சினைக்கு ஒரே தீர்வு என பிரபாகரன் அறிவித்துள்ளாரே?
பதில்: இக் கேள்விக்கு இப்போது அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே நான் பதில் கூறியுள்ளேன். அவர் சுதந்திரஈழத்தை அடைந்தால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன். அதற்கிடையே, தமிழர்கள் படுகொலைக்குஆளாகாமல், இரு சாராரும் சேர்ந்து ஏதாவது மாற்று ஏற்பாடுகளை கண்டுபிடித்து அதில் உடன்பாடு ஏற்பட்டு,அமைதி ஏற்படுமானால் அதற்கும் நான் மகிழ்ச்சி அடைவேன்.
கேள்வி: அர்ஜூன் சிங்கை சந்தித்தது குறித்து?
பதில்: அவரிடம் நான் சில முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளேன். திருவள்ளுவர் விருது, தொல்காப்பியர்விருது இவை இரண்டும் தமிழ் செம்மொழி சார்பாக தமிழ் ஆன்றோர், சான்றோர்களுக்கு , தமிழ் வித்தகருக்குவழங்குவது பற்றி எடுத்துக் கூறினோம். விரைவில் ஏற்பாடு செய்வதாக கூறினார்.
இட ஒதுக்கீடு தொடர்பாகவும் அவரிடம் வலியுறுத்திக் கூறியிருக்கிறேன். நல்ல முடிவு கிடைக்கும் என்றுஉறுதியளித்துள்ளார் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications