கேரளாவுக்கு எதிராக விஜயகாந்த் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:முல்லைப் பெரியாறுப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால், கேரள அரசைக்கண்டித்து டிசம்பர் 2ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர்விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக டெல்லியில் நடந்த இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தில்எந்த முடிவும் ஏற்படாதது ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல், இன்னும் 15நாட்களுக்குள் இரு மாநில அமைச்சர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்று கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியைஅளிக்கிறது.

முதல் அமைச்சரே பேசித் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையை இரு மாநில அமைச்சர்கள் கூடிப் பேசி தீர்ப்பார்கள்என்று கூறுவது காதில் பூ சுற்றும் வேலையாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கலாம் என இரு மாநிலங்களின்கருத்துக்களையும் கேட்ட பிறகு, விரிவாக ஆராய்ந்த பிறகே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை மாநிலமுதல்வர்கள் கூட்டத்தின்போது சுட்டிக் காட்டியிருக்க வேண்டிய மத்திய அரசு அதை தெளிவுபடுத்துவதற்குப்பதில், மேலும் தயக்கம், தாமதம் காட்டுவது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் மோசடியாகும்.

இதேபோலத்தான் காவிரிப் பிரச்சினையில் கடந்த 38 ஆண்டு காலமாக மாநில அரசுகளைப் பேசச் சொல்வதும்,பிறகு டெல்லியில் கூட்டம் போடுவதும், நடுவர் மன்றத் தீர்ப்புக்கு முயற்சித்தால், அதைத் திரும்பப் பெறச்செய்வதுமாக மத்திய அரசு இன்று வரை இழுத்தடித்து வருகிறது.

இப்படித்தான் கச்சத்தீவில் போய் ராமேஸ்வரம் மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.அதைத் தூக்கி இலங்கைக்கு கொடுத்து விட்டனர். இப்போது அங்கு போய் நமது மீனவர்கள் மீன் பிடிக்கப்போனால் சுட்டுத் தள்ளுகிறது இலங்கை படை.

இப்படி தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து இழைத்து வரும் அநீதிகளை திமுகவும் சரி, அதிமுகவும் சரிதட்டிக் கேட்கவில்லை, உரிமையை நிலை நாட்டவில்லை.

காங்கிரஸ், பாஜகவோடு அவ்வப்போது கூட்டணி வைத்துக் கொள்வதும், அவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும்தலையாட்டும் தலையாட்டி பொம்மைகளாக அரசியல் நடத்தி தமிழக நலன்களைப் பறிகொடுத்தனர். இன்றுவரைஅதே நிலைதான்.

இன்னும் 15 நாட்களில் வட கிழக்குப் பருவ மழை முடிந்து விடும். அதன் பிறகு நீரே இல்லாதபோது நீர்த்தேக்கம்குறித்து யார் பேசப் போகிறார்கள் என்ற எண்ணத்தில்தான் இன்னும் 15 நாட்களில் இரு மாநில அமைச்சர்களும்பேசுவார்கள் என்று கூறுகிறார்கள் போல.

தமிழக மக்கள் தங்களது ஒன்றுபட்ட சக்தி மூலமே தங்களுக்குரிய நியாயத்தை நிலை நாட்ட முடியும் என்றஉணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேமுதிக வரும் 2ம் தேதி தமிழகம் முழுவதும்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளது.

தேனியில் நானும்,மாவட்ட தலைநகரங்களில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்அலுலவகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

தேமுதிகவை ஆரம்பித்த பின்னர் பெரிய அளவிலான போராட்டம் ஒன்றில் விஜயகாந்த் குதிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+