மதரஸா பட்டங்களுக்கு அங்கீகாரம்: கமிட்டி
டெல்லி:இஸ்லாமிய மதரஸாக்கள் வழங்கும் சான்றிதழ்கள், பட்டங்களுக்கு அங்கீகாரம்வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி ராஜீந்தர் சாச்சார்கமிட்டியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை குறித்து ஆராய டெல்லிஉயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சாச்சார் தலைமையிலான 7 பேர் கொண்டகமிட்டியை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் நியமித்தது.
அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்ட சாச்சார் கமிட்டி தனதுபரிந்துரையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியது. இந்த அறிக்கை இன்றுநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டது. மத்தியசிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே அறிக்கையை சமர்ப்பித்தார்.
சாச்சார் கமிட்டி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:
இஸ்லாமிய மதரஸாக்கள், இஸ்லாமியர்களுக்கு மதக் கல்வியை போதிப்பதில் முக்கியபங்கு வகிக்கின்றன. மதரஸாக்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள், பட்டங்களுக்குபல்கலைக்கழக மானியக்குழு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
மதரஸாக்களில் வழங்கப்படும் பட்டங்கள் மூலம், சிவில் சர்வீஸ் தேர்வுகள்,பாதுகாப்பு துறை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
உயர் கல்வி பாடத் திட்ட முறையோடு மதரஸாக்களின் கல்வி முறையை இணைப்பதுகுறித்து பரிசீலிக்கலாம். இதன் மூலம் மதரஸாக்களில் படிப்பை முடித்து விட்டுவழக்கமான படிப்புகளில் சேர இஸ்லாமிய மாணவர்களுக்கு வசதியாக இருக்கும்.
இஸ்லாமியர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்ப்பதற்கு வசதியாக சம வாய்ப்புஆணையத்தை நிறுவ வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், தொகுதிசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில்குறைந்தது ஒரு இஸ்லாமிய இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டரையாவதுநியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் உருது மொழிப் பாடத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும்.
கடந்த 60 ஆண்டுகளில் சிறுபான்மை பிரிவினர் பொதுத் துறைப் பணியில் பரவலாகஇடம் பெற்றுள்ளனர். அதேசமயம், அரசியலில் இஸ்லாமியர்களின் பங்குகுறைவாகவே உள்ளது. இது இந்திய சமூகத்திலும், அரசியலிலும் மோசமானவிளைவை ஏற்படுத்தக் கூடும்.
வளர்ச்சிப் பணியில் தீவிரமாக பங்கேற்க முடியாத அளவுக்கு அவர்கள் பலவீனமாகஉள்ளனர். மாற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது சமமான அளவுக்கு பங்கேற்கவோமுடியாத நலையில் அவர்கள் உள்ளனர்.
அரசு மற்றும் அரசியலில் இஸ்லாமியர்களும் தீவிரப் பங்காற்றும் வகையிலானமாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம்.
அரசு வேலைகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.எனவே அரசு வேலை வாய்ப்பு தேர்வுக் குழுக்கள், வாரியங்களில் இஸ்லாமியசமூகத்தினரையும் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில்கூறப்பட்டுள்ளது.
அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் அந்துலே, அறிக்கையில் கூறப்பட்டுள்ளபரிந்துரைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும்சிறுபான்மையினர் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications