கூடு மாறிய வேடந்தாங்கல் பறவைகள்: ஜெ.
சென்னை:அதிமுகவிலிருந்து விலகி போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளர்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன் ஆனந்த ராமகிருஷ்ணன்-சிவ ஆனந்தி திருமணத்தைநடத்தி வைத்து ஜெயலலிதா பேசியதாவது,
அஞ்சா நெஞ்ச தொண்டர் அனிதா ராதாகிருஷ்ணன் இல்ல திருமணத்தை நடத்தி வைத்ததில் பெருமகிழ்ச்சிஅடைகிறேன். அனிதா ராதாகிருஷ்ணன் கடமை தவறாமல் கழகப்பணி ஆற்றக்கூடியவர். கழகத்தின் மீது பற்றும்விசுவசாம் கொண்டவர்.
மணமகன் புதிய கூட்டணி அமைத்திருக்கிறார். நீங்கள் உருவாக்கி இருக்கும் இந்த கூட்டணி மூலம் குடும்பபொறுப்பில் உரிய பங்கை மணமகளுக்கு தரவேண்டும்.
கழக உறுப்பினர்களுக்கு நான் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய இடத்தை பறித்துக் கொள்ளவோ,களவாடவோ முடியாது. ஏன்னென்றால் பொன்னான எதிர்காலம் நமக்கு சொந்தம். நாம் மக்கள் சிம்மாசனத்தில்வீற்றிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் சில்ர் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். அது வெற்றி அல்ல.ஜனநாயகத்தின் தோல்வி.
எருக்கன் இலையில் இருந்து மரிக்கொழுந்து வாசம் ஒருபோதும் வராது. அதுபோல திமுகவிடம் ஜனநாயகபண்பை எதிர்பார்க்க முடியாது. தேர்தலில் செயற்கையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதனால் நமக்குபின்னடைவு என்று கருதி சில வேடந்தாங்கல் பறவைகள் வேறு இடத்துக்கு பறந்து சென்று விட்டன.
1996ல் கழகம் தோல்வி அடைந்த போது இனி அம்மா சும்மாதான் என்று கருதி இங்கிருந்து சில துரோகிகள்வேறு இடம் சென்று விட்டனர். பின்னர் 1998 நாடாளுமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெற்ற பின் விலகி சென்றவேடந்தாங்கல் பறவைகள் மீண்டும் நம்மிடம் வந்தன.
பின்னர் 2001 தேர்தலில் கழகம் ஆட்சியில் அமர்ந்த போது மேலும் சில பறவைகள் இங்கு வந்து மனம் திருந்திவிட்டதாக சொன்னதால் ஏற்றுகொண்டோம். 2006 தேர்தலில் செயற்கையான பின்னடைவை கழகம் சந்தித்ததால்சில வேடந்தாங்கல் பறவைகள் கூட்டை விட்டு வேறு இடம் தேடி சென்று விட்டது. அவர்கள் திருந்தவில்லை.
அவர்கள் தப்புக்கணக்கு போட்டு கொண்டு சென்று விட்டனர். காலம் விரைவில் மாறும். அதிமுக ஆட்சிக்குவரும் தேசிய அளவில் கழகம் பெரும் பங்கு வகிக்கும் இது நிச்சயம் நடந்தே தீரும்.
அப்போது பறந்து சென்ற பறவைகள் மீண்டும் மன்னிப்பு கேட்டு வந்தால் கழகத்தில் சேர்க்கமாட்டேன். கழகத்தில்கொள்கை உறுதி மீது விசுவாசம், அதிக பற்று உள்ள தொண்டர்களுக்கு மட்டுமே இனி முக்கியத்துவம்கொடுக்கப்படும்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெளிவாக இருக்கிறார். நான் உயிரோடு இருக்கும் வரை அனிதாராதாகிருஷ்னுக்கு என் இதயத்தில் இடம் உண்டு. இந்த இயக்கம் அமைக்கும் ஆட்சியில் அவருக்கு தனி இடம்உண்டு. உண்மையான பலசாலிகள் அதற்கான பலனை அடைந்தே தீருவார்கள் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications